இருபியூட்டைல்வெள்ளீய இருலாரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபியூட்டைல்வெள்ளீய இருலாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டைபியூட்டைலின்டின் டைலாரேட்டு
இனங்காட்டிகள்
77-58-7
ChemSpider 21106564
InChI
  • InChI=1S/2C12H24O2.2C4H9.Sn/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;2*1-3-4-2;/h2*2-11H2,1H3,(H,13,14);2*1,3-4H2,2H3;/q;;;;+2/p-2
    Key: UKLDJPRMSDWDSL-UHFFFAOYSA-L
  • InChI=1/2C12H24O2.2C4H9.Sn/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;2*1-3-4-2;/h2*2-11H2,1H3,(H,13,14);2*1,3-4H2,2H3;/q;;;;+2/p-2/rC32H64O4Sn/c1-5-9-13-15-17-19-21-23-25-27-31(33)35-37(29-11-7-3,30-12-8-4)36-32(34)28-26-24-22-20-18-16-14-10-6-2/h5-30H2,1-4H3
    Key: UKLDJPRMSDWDSL-PFKFAYPQAT
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • CCCCCCCCCCCC(=O)O[Sn](CCCC)(CCCC)OC(=O)CCCCCCCCCCC
பண்புகள்
C32H64O4Sn
வாய்ப்பாட்டு எடை 631.56
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.066 கிராம்/மி.லி
உருகுநிலை 22 முதல் 24 °C (72 முதல் 75 °F; 295 முதல் 297 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இருபியூட்டைல்வெள்ளீய இருலாரேட்டு (Dibutyltin dilaurate) என்பது C32H64O4Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவெள்ளீய சேர்மமான இதை டைபியூட்டைலின்டின் டைலாரேட்டு என்ற பெயரால் அழைக்கிறார்கள். நிறமற்ற நீர்மமாக இருபியூட்டைல்வெள்ளீய இருலாரேட்டு காணப்படுகிறது. கட்டமைப்பைப் பொறுத்தவரை இம்மூலக்கூறில் இரண்டு லாரேட்டு தொகுதிகள் டைபியூட்டைலின்(IV) மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன [1].

நான்முகி வடிவ மூலக்கூற்று வடிவியலை வெள்ளீயம் வெளிப்படுத்துகிறது. தொடர்புடைய பிசு(புரோமோபென்சோயேட்டு) படிகக் கட்டமைப்பின் அடிப்படையில் கார்பனைல் ஆக்சிசன் மையங்கள் வெள்ளீயத்துடன் பலவீனமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. ஐசோசயனேட்டுகள் மற்றும் டையால்களிலிருந்து பாலியூரித்தேன் தயாரித்தலுக்கு டைபுயூட்டைலின் டையாக்டானோயேட்டுடன் இருபியூட்டைல்வெள்ளீய இருலாரேட்டைச் சேர்த்து வினையூக்கியாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும், பரிமாற்ற எசுத்தராக்கல் வினையிலும், சிலிக்கோன்களை அறைவெப்பநிலை கடினமாக்கல் செயல்முறையிலும் இது வினையூக்கியாகப் பயன்படுகிறது. பாலிவினைல் குளோரைடு எனப்படும் நெகிழி பலபடியில் நிலைநிறுத்தியாக இருபியூட்டைல்வெள்ளீய இருலாரேட்டு பயன்படுத்தப்படுகிறது [2].

தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]

  • டைபியூட்டைலின் டையாக்டானோயேட்டு: சிஏஎசு எண்#4731-77-5,
  • டைபியூட்டைலின் டையசிட்டேட்டு: சிஏஎசு எண் #1067-33-0

போன்றவை இதனுடன் தொடர்புடைய சேர்மங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Weng Ng, S., Das, V. G. K., Yip, W.-H., Wang, R.-J., Mak, T. C. W., "Di-n-butyltin(IV) di-o-bromobenzoate, a weakly-bridged dimer", Journal of Organometallic Chemistry 1990, volume 393, 201-204. எஆசு:10.1016/0022-328X(90)80199-A
  2. Applications, Environmental Issues, and Analysis in Organotin Chemistry, Second Edition. Alwyn G. Davies 2004 Wiley-VCH Verlag GmbH & Co. KGaA. ISBN 3-527-31023-1