இருபருவத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேர்க்கோசு செடி
வேர்க்கோசு ஒரு இருபருவத் தாவரமாகும்.

இருபருவத் தாவரம் (ஒலிப்பு) (Biennial plant) எனப்படுவது தன் வாழ்க்கைச் சுற்றை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்யும் ஒரு பூக்கும் தாவரமாகும். தன் முதலாம் ஆண்டில் வேர்கள், தண்டுகள், இலைகள் ஆகியவற்றை தோற்றுவிக்கும் இத்தாவரம், குளிர் மாதங்களின் போது உறங்கும் நிலையில் இருக்கும். அதன் பின்னர், தன் இரண்டாம் ஆண்டில் பூக்களையும் கனிகளையும் விதைகளையும் தோற்றுவித்துவிட்டு, இத்தாவரம் மாய்ந்து போகும். வெங்காயம், மஞ்சள் முள்ளங்கி போன்றவை இருபருவத் தாவரங்களாகும்.

பூக்கள், கனிகள் அல்லது விதைகளுக்காக நடப்படும் இருபருவத் தாவரங்கள் இரண்டாண்டுகளுக்கு வளர்க்கப்படுகின்றன. இலைகளுக்காகவோ வேர்களுக்காகவோ நடப்படும் இருபருவத் தாவரங்கள் ஓராண்டுக்கு மட்டுமே வளர்க்கப்படுகின்றன. (இவை பூப்பதற்கோ காய்ப்பதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை.)

மேலும் காண்க[தொகு]

  • ஆண்டுத் தாவரம் -- தன் வாழ்க்கைச் சுற்றை ஒரு வளர்ச்சிப் பருவத்தில் முடித்துக்கொண்டு மாய்ந்து போகும் தாவரமாகும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபருவத்_தாவரம்&oldid=3280869" இலிருந்து மீள்விக்கப்பட்டது