இருபரிமாண மூலப்பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருபரிமாண மூலப்பொருட்கள் என்பது ஒற்றை அணு அடுக்கு மென்படலங்களையுடைய (படிகம்) படிகங்கள் ஆகும். 2004 ஆம் ஆண்டு கிராஃபைட்ட்டிலிருந்து கிராஃபீன் ஐ பிரித்தெடுத்தது முதல், மற்ற இருபரிமாண மூலப்பொருட்களை பிரித்தெடுப்பதிலும் ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் முடுக்கிவிடப்பட்டன. ஏனென்றால் இத்தகைய இருபரிமாண மூலப்பொருட்களின் வியக்கத்தக்க இயற்பியல், வேதியியல் பண்புகளால் அதன் பயன்பாடுகள் ஒளி மின்னழுத்தியம், குறைகடத்திகள், மின்முனைகள், நீர் தூய்மையாக்கம் போன்றவற்றில் அதிகரித்துள்ளது.

இருபரிமாண மூலப்பொருட்களை பொதுவாக பல்வேறு தனிமங்கள் (அ) சேர்மங்களின் இருபரிமாண தனிமப் புறவேற்றுருக்களாக வகைப்படுத்தலாம். இவைகள் சகப்பிணைப்பையுடைய இரு தனிமங்களை கொண்டதாகும். 


கிராஃபீன் முதல் இருபரிமாண மூலப்பொருளாக 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இன்னும் 500 க்கும் மேற்பட்ட இருபரிமாண மூலப்பொருட்களை கண்டுபிடிக்கப்படவேண்டியுள்ளது.[1] 2010 முதல் இதற்கான ஆராச்சிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டு வளர்ந்து வருகிறது.[2]

இருபரிமாண தனிம புரவேற்றுருக்கள் [தொகு]

கிராஃபீன்[தொகு]

கிராஃபீன் என்பது ஒற்றையடுக்கு கார்பன் அணுக்களை உடைய தேன்கூடு அணிச்சட்டகம் ஆகும்.

போரோஃபீன் [தொகு]

B
36B
36
° போரோஃபீன், மேற்பரப்பு, பக்கவாட்டு காட்சி 

போரோஃபீன் என்பது போரானின் படிக தனிமப் புறவேற்றுருவாகும். அதன் ஒரு அலகு, 36 போரான் அணுக்களை இருபரிமாண மென்படல அடுக்கில் அடுக்கப்பட்டு, மத்தியில் அறுங்கோண வடிவத்தையுடைய அமைப்பினைக் கொண்டுள்ளது.[3][4]

References[தொகு]

  1. "The super materials that could trump graphene". Nature. 17 June 2015. http://www.nature.com/news/the-super-materials-that-could-trump-graphene-1.17775. பார்த்த நாள்: 19 June 2015. 
  2. Berger, Andy (July 17, 2015). "Beyond Graphene, a Zoo of New 2-D Materials". Discover Magazine. பார்த்த நாள் 2015-09-19.
  3. "Will ‘borophene’ replace graphene as a better conductor of electrons?". KurzweilAI (February 5, 2014). பார்த்த நாள் February 5, 2014.
  4. Piazza, Z. A.; Hu, H. S.; Li, W. L.; Zhao, Y. F.; Li, J.; Wang, L. S. (2014). "Planar hexagonal B36 as a potential basis for extended single-atom layer boron sheets". Nature Communications 5. doi:10.1038/ncomms4113. பப்மெட்:24445427. Bibcode: 2014NatCo...5E3113P.