இருட்டு மின்னோட்டம் (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலிலும், மின்னணுப் பொறியியலிலும், இருட்டு மின்னோட்டம் (dark current) என்பது ஒளிக்காணிக் கருவிகளான ஒளி பெருக்கிக் குழாய், ஒளிடையோடு போன்றவற்றில் ஒளியணுக்கள் இல்லாத நிலையிலும் மிகக் குறைவான அளவில் உருவாக்கப்படும் மின்னோட்டம் ஆகும். எந்தவொரு கதிர் இயக்கமும் நுழையாத நிலையிலும் மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகிறது.[1]

சாதாரண டையோடுகளில் காணப்படும் "பின்னோக்குச் சார்பு கசிவு மின்னோட்டம்" (reverse bias leakage current) அனைத்து வகை டையோடுகளிலும் உருவாக்கப்படுகிறது. இயக்கமில்லாத பகுதியில் (Depletion region) இலத்திரன்கள் மற்றும் மின்துளைகள் ஆகியவற்றிற்கிடையே இயைபிலா இயக்கத்தால் பின்னோக்குச் சார்பு கசிவு மின்னோட்டம் உருவாகிறது.[2]

மின்னுாட்டங்களின் உருவாக்கம் என்பது இயக்கமில்லாத பகுதியிலுள்ள படிகக்குறைபாட்டைப் (Crystallographic defect) பொறுத்தது. இப் பண்பினால் இருட்டு மின்னோட்ட நிறமாலை உருவாக்கும் பட்டை வரைபடம் படிகக்குறைபாட்டைக் கண்டறிய உதவுகிறது.[3]

மின்னூட்ட இணைப்புக் கருவிகளில் (Charge-coupled device) தோற்றுரு உணரிகளில் (Image sensor) ஏற்படும் இரைச்சல்களுக்குக் காரணமாக இருட்டு மின்னோட்டம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dark Current and Influence of Target Emissivity, Photonics & Imaging Technology, September 2016, pp. 11-14 [1]
  2. "dark current". பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017.
  3. "Dark Current". பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017.