இருட்டுக்கடை அல்வா, திருநெல்வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருட்டுக்கடை என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நுழைவாயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஒரு அல்வா கடையாகும். இதன் தனி சுவைக்காக புகழ் பெற்றது. குறிப்பாக தென்னிந்திய சுற்றுலா பயணிகள் இங்கு அல்வா வாங்குவது வழக்கம்.

அல்வாவின் தனித்துவம்[தொகு]

இருட்டுக்கடை அல்வாவிற்கென்று தனிச்சுவை வரக் காரணம் அல்வா செய்ய பயன்படுத்தும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளால் தான் அரைக்கிறார்கள் மற்றும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும், இந்த அல்வாவிற்கான தனி சுவையை தருவதாக சொல்லப்படுகிறது. கைகளால் தான் அல்வா கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்கிறார்கள்.

பெயர் காரணம்[தொகு]

கடை ஆரம்பிக்கப்பட்ட நாளில் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. மாலை நேரத்தில் தான் இது திறக்கப்படுவது வழக்கம் என்பதால் இருட்டாய் இருக்கும் கடை என்பதே காலப்போக்கில் மாறி 'இருட்டுக்கடை' என்றாகிவிட்டது. இன்றுவரை இதற்கென தனி பெயர்பலகை கூட கிடையாது. இப்போது எண்ணெய் விளக்குக்கு பதில் சாதாரண மின்விளக்கை மட்டுமே பயன் படுத்துகிறார்கள்.

வரலாறு[தொகு]

1940களில் இராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டு, இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது.[1]

அமைவிடம்[தொகு]

நெல்லை நகரின் மையமான நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் இந்தக்கடை உள்ளது.

திறக்கும் நேரம்[தொகு]

மாலை 5 மணி அளவில் இருட்டுக்கடை திறக்கப்பட்டு, இரவு 8.00 மணிக்கு முன்பாக மூடப்படுகிறது.

நீதிமன்றத் தடை[தொகு]

இருட்டுக் கடை அல்வா பெயரில் போலி கடைகள் நடத்தவும், இந்தப் பெயரை வேறு யாரும் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் கதை".
  2. "இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!". ஒன்இந்தியா தமிழ் (ஏப்ரல் 22, 2011)