இருசார் அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருசார் அம்மன் என்பது தமிழ்நாட்டில் வன்னியர் சாதி மக்களில் ஒரு பிரிவினர் வழிபடும் குலதெய்வம் ஆகும். இது பெண்தெய்வம் ஆகும். இருசார், இருசாயி, இருசி, குழி இருசார் ஆகிய பெயர்களிலும் இத்தெய்வத்தைக் குறிப்பிடுகின்றனர். இத்தெய்வத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழா நடத்தப்படுகிறது. சில இருசார் கோயில்களில் இருசன் என்ற ஆண்தெய்வத்தையும் வைத்து வழிபடுகின்றனர்.

திருவிழாவின் போது நல்லெண்ணெய் விளக்கேற்றி, வெண்பொங்கல் வைத்து, ஆடு, சேவல், பன்றி ஆகியவற்றைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம். குழி இருசார் என்ற பெயரில் உள்ள கோயில்களில் பலியிட்ட பெட்டை ஆட்டை கோயில் வளாகத்திலேயே சமைத்து உண்பர். எஞ்சியவற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவர்.

கோயில்கள்[தொகு]

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் தாழையூர் வறட்டேரி அருகில் ஒரு குழி இருசார் கோயிலும், சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் வைகுந்தம் ஏரியிலும், அரியாம்பாளையத்திலும், நொறுக்கம்பாளையத்திலும், விழுப்புரம் மாவட்டம் மலைக்கோட்டாலம் வனத்திலும் இருசார் கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தெய்வத்தைக் குலதெய்வமாக வழிபடுவோரில் ஆண்களில் சிலர் இத்தெய்வத்தை நினைவுபடுத்தும் வகையில் இருசாகவுண்டர், இருசப்பன் ஆகிய பெயர்களையும், பெண்களில் சிலர் இருசாயி என்ற பெயரையும் கொண்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருசார்_அம்மன்&oldid=2086496" இருந்து மீள்விக்கப்பட்டது