உள்ளடக்கத்துக்குச் செல்

இருசல்பியூரைல் குளோரைடு புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருசல்பியூரைல் குளோரைடு புளோரைடு
Disulfuryl chloride fluoride
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
[(புளோரோசல்போனைல்)ஆக்சி]சல்போனைல் குளோரைடு
வேறு பெயர்கள்
  • குளோரிடோகந்தக புளோரிடோசந்தக நீரிலி[1]
  • பைரோசல்பியூரைல் குளோரைடு புளோரைடு
  • கந்தக(VI) பென்டாக்சிகுளோரைடு புளோரைடு
இனங்காட்டிகள்
13637-85-9 Y
ChemSpider 103871276
InChI
  • InChI=1S/ClFO5S2/c1-8(3,4)7-9(2,5)6
    Key: FKKHMCZBUXHJDY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101943079
  • O=S(=O)(OS(=O)(=O)Cl)F
பண்புகள்
ClFO5S2
வாய்ப்பாட்டு எடை 198.56 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.7934 கி/செ.மீ3
கொதிநிலை 100 °C (212 °F; 373 K)
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருசல்பியூரைல் குளோரைடு புளோரைடு (Disulfuryl chloride fluoride) என்பது S2O5ClF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] டைசல்பியூரைல் குளோரைடு புளோரைடு, பைரோ சல்பியூரைல் குளோரைடு புளோரைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கந்தகம், ஆக்சிசன், குளோரின், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இது உருவாகிறது. கட்டமைப்பு ரீதியாக, இது பைரோகந்தக அமிலத்தின் குளோரோபுளோரோசல்பூரிக் அமில ஒப்புமையாக அல்லது குளோரோகந்தக அமிலம் மற்றும் புளோரோசல்பியூரிக் அமிலத்தின் கலப்பு நீரிலியாக அறியப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

புளோரோசல்போனிக் அமிலத்தையும் சயனூரிக் அமிலத்தையும் சேர்த்து விரைவாகச் சூடுபடுத்தினால் இருசல்பியூரைல் குளோரைடு புளோரைடு உருவாகும்.:[3]

6HSO3F + (CNCl)3 -> 3S2O5ClF + (HNCO)3 + 3HF

மேலும், 80-90 °செல்சியசு வெப்பநிலையில் வெள்ளி மோனோபுளோரைடுடன் (AgF) உடன் டைசல்பூரைல் குளோரைடு (S2O5Cl2) சேர்த்து வினைபுரியச் செய்தாலும் இருசல்பியூரைல் குளோரைடு புளோரைடு உருவாகும்.[4]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

இருசல்பியூரைல் குளோரைடு புளோரைடு ஒரு நிறமற்ற நீர்மமாகும். நீருடன் சேர்ந்தால் நீராற்பகுத்தல் வினைக்கு உட்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Disulfuryl chloride fluoride | Chemical Substance Information | J-GLOBAL" (in ஆங்கிலம்). J-GLOBAL. Retrieved 18 August 2025.
  2. Dykyj, J.; Svoboda, J.; Wilhoit, R. C.; Frenkel, M. L.; Hall, K. R. (1999). "Vapor Pressure of Chemicals: Part A. Vapor Pressure and Antoine Constants for Hydrocarbons and Sulfur, Selenium, Tellurium and Hydrogen Containing Organic Compounds". NIST. Retrieved 18 August 2025.
  3. Inorganic Syntheses: Volume XI. New York: John Wiley & Sons. 2009. p. 153. ISBN 9780470132753. Retrieved 18 August 2025.
  4. Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 71. ISBN 978-0-323-14724-8. Retrieved 20 August 2025.