உள்ளடக்கத்துக்குச் செல்

இருங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருங்களூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
621105

இருங்களூர் (Irungalur) என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1][2]

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், மண்ணச்சநல்லூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 335 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இந்த நகரத்தில் 2,155 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 9,367 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4,491 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4,876 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 77.3% ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09%-ஐ விடக்குறைவு ஆகும்.[3]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருங்களூர்&oldid=4523904" இலிருந்து மீள்விக்கப்பட்டது