உள்ளடக்கத்துக்குச் செல்

இருகுளோரோபிரிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருகுளோரோபிரிடின்கள் (Dichloropyridines) என்பவை Cl2C5H3N என்ற மூலக்கூற்று வாய்பாடைக் கொண்ட கரிமச் சேர்மங்களைக் குறிக்கும். இச்சேர்மங்களில் ஒரு பிரிடின் வளையம் இரண்டு குளோரைடுகளால் பதிலீடு செய்யப்பட்டிருக்கும்.[1] இதே மூலக்கூறு வாய்பாட்டில் ஆறு மாற்றியங்கள் அறியப்படுகின்றன. வெண்மையாகவோ அல்லது நிறமற்றோ காணப்படும் இச்சேர்மங்கள் பெரும்பாலும் அறை வெப்பநிலையில் திண்மமாகக் காணப்படுகின்றன.

இருகுளோரோபிரிடினின் மாற்றியங்கள்
பெயர் பதிவு எண் உருகு நிலை (°செல்சியசு)
2,3-இருகுளோரோபிரிடின் 2402-77-9 203–204
2,4-இருகுளோரோபிரிடின் 26452-80-2 -1
2,5-இருகுளோரோபிரிடின் 16110-09-1 193–194
2,6-இருகுளோரோபிரிடின் 2402-78-0 211–212
3,4-இருகுளோரோபிரிடின் 55934-00-4 22–24
3,5-இருகுளோரோபிரிடின் 2457-47-8 178–179

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shimizu, Shinkichi; Watanabe, Nanao; Kataoka, Toshiaki; Shoji, Takayuki; Abe, Nobuyuki; Morishita, Sinji; Ichimura, Hisao (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a22_399
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருகுளோரோபிரிடின்&oldid=4058247" இலிருந்து மீள்விக்கப்பட்டது