இரீனா பானர்ஜி
இரீனா பானர்ஜி | |
---|---|
பிறப்பு | 1963 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
அறியப்படுவது | சிற்பம் |
வலைத்தளம் | |
rinabanerjee |
இரீனா பானர்ஜி (Rina Banerjee:பிறப்பு 1963) ஓர் இந்திய-அமெரிக்கக் கலைஞரும் மற்றும் சிற்பியும் ஆவார்.[1] இவர் தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.[2]
இளமை வாழ்க்கையும் தொழிலும்
[தொகு]இரீனா பானர்ஜி, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் ஓர் வங்காளக் குடும்பத்தில் 1963 ஆம் ஆண்டில் பிறந்தார்.[3] இலண்டன் மற்றும் நியூயார்க்கில் வளர்ந்தார்.[4][5] தற்போது, அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஓமியோபதி மருத்துவரான தனது தாத்தா சிகிச்சையளிக்கும்போது தான் பார்த்து தனது கலைக்கான உத்வேகம் பெற்றதாக ஒரு நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது தாத்தாவுடன் இவர் சென்ற பல படங்கள் மற்றும் காட்சிகளை இவர் படைத்துள்ளார். மேலும் அவரது கலைப் படைப்புகளில் காணலாம். தனது கலைப்படைப்புகள் நிலையானதாக இல்லாமல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்க விரும்புகிறார்.[6] 1995 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தின் கலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் அச்சுத் தயாரிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஒகையோ கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் பல்பகுதியப் பொறியியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[7] பிராங்க்ஸ் கலை அருங்காட்சியகம், விட்னி அமெரிக்கன் கலை அருங்காட்சி மற்றும் பிற குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்களில் இவரது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bio", Rinabanerjee.com, Retrieved online 17 October 2018.
- ↑ "Bio", Rinabanerjee.com, Retrieved online 17 October 2018.
- ↑ Home page, Rinabanerjee.com.
- ↑ https://rinabanerjee.com/page/4-About%20.html
- ↑ Jumabhoy, Zehra (22 June 2011). "Rina Banerjee discusses her exhibition at Musée Guimet". Art Forum (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 21 July 2022.
- ↑ Shetty, Deepika (3 February 2014). "Suggestive sculptures that move by New York-based artist Rina Banerjee". The Straits Times Communities இம் மூலத்தில் இருந்து 28 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328234520/http://www.stcommunities.sg/entertainment/arts/news/suggestive-sculptures-move-new-york-based-artist-rina-banerjee.
- ↑ Jumabhoy, Zehra (22 June 2011). "Rina Banerjee discusses her exhibition at Musée Guimet". Art Forum (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 21 July 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- Rina Banerjee at Artsy.net
- Rina Banerjee at ULAN
- Rina Banerjee at the Whitney Museum of American Art