இரீனா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரீனா குமாரி (Reena Kumari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். வில்வித்தை போட்டியில் பங்கேற்று இவர் விளையாடுகிறார்.[1]

குமாரி 2004 கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] பெண்கள் தனிநபர் சுற்றில் 72-அம்பு புள்ளிகள் 620 எடுத்து 43 ஆவது இடத்தைப் பிடித்தார். முதல் சுற்றில் தரவரிசையில் 22 ஆவது இடத்தில் இருந்த சியார்ச்சியாவின் கிறிசுட்டின் எசெபுவாவை எதிர்கொண்டார். 18 அம்பு போட்டியில் எசெபுவாவை 153-149 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து 32 பேர் சுற்றுக்கு முன்னேறி குமாரி ஆச்சரியமூட்டினார். 32 பேர் சுற்றில் பூட்டானிய வில்லாளரான திசெரிங் சோடனை எதிர்கொண்டார். ஒழுங்குமுறை 18 அம்புகளில் 134-134 என்ற சமநிலைக்கு பின்னர் சமநிலை முறிவு மூலம் 7-4 என்ற புள்ளி கணக்கில் குமாரி வெற்றிபெற்றார். இதனால் 16 பேர் சுற்றுக்கு மேலும் முன்னேறினார். பின்னர் இவர் தரவரிசையில் 6 ஆவது இடத்திலுள்ள சீன தைபேவைச் சேர்ந்த யுவான் சூ சியிடம் 166-148 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றார். இறுதியாக பெண்களுக்கான தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இரீனா குமாரி 15 ஆவது இடத்தைப் பிடித்தார்.

8 ஆவது இடத்தைப் பிடித்த இந்தியப் பெண்கள் வில்வித்தை அணியின் உறுப்பினராகவும் இரீனா குமாரி இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Reena Kumari". sports-reference.com. 18 April 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 February 2010 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. "Indian women lose narrowly". தி இந்து. 21 August 2004. Archived from the original on 24 ஆகஸ்ட் 2004. https://web.archive.org/web/20040824215018/http://www.hindu.com/2004/08/21/stories/2004082106422000.htm. பார்த்த நாள்: 6 February 2010. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீனா_குமாரி&oldid=3333316" இருந்து மீள்விக்கப்பட்டது