இரீட்டா ஃபரியா
இரீட்டா ஃபரியா Reita Faria | |
---|---|
பிறப்பு | இரீட்டா ஃபரியா 23 ஆகத்து 1943 மும்பை, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | வடிவழகி, மருத்துவர் |
உயரம் | 1.73 m (5 அடி 8 அங்) |
வாழ்க்கைத் துணை | மருத்துவர் டேவிட் பாவல். |
பிள்ளைகள் | 2 |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | மும்பை அழகி 1966 ஈவ் வாராந்தரி இந்திய அழகி 1966 உலக அழகி |
முக்கிய போட்டி(கள்) | மும்பை அழகி 1966 (வெற்றியாளர்) ஈவ் வாராந்தரி இந்திய அழகி 1966 (வெற்றியாளர்) உலக அழகி 1966 (வெற்றியாளர்) (மாலைநேர ஆடை சிறப்பு) |
இரீட்டா ஃபரியா பாவல் [1] (Reita Faria Powell) இந்தியாவைச் சேர்ந்த [2] ஒரு மருத்துவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 23 அன்று இவர் பிறந்தார். 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இவர் வெற்றி பெற்றார். வடிவழகு மாதிரியாகவும் இவர் இருந்துள்ளார். பம்பாயில் (மும்பை) கோவாவைச் சேர்ந்த பெற்றோருக்கு இவர் பிறந்தார், உலக அழகுப் போட்டியில் வென்ற முதல் ஆசியப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார். ஒரு மருத்துவராக இருந்து இத்தகுதியைப் பெற்ற முதல் உலக அழகி வெற்றியாளரும் இவரே. [3]
1966 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணியான இவர் உலகம் முழுவதையும் உட்கார்ந்து இந்தியாவைப் பார்க்க வைத்தார். இக்கிரீடத்தை வென்றதன் மூலம் இரீட்டா பிற்கால இந்தியப் போட்டியாளர்களுக்கு வழி காட்டியாக விளங்கினார். அவர்களாலும் உலகப் பட்டங்களை வென்று இந்தியாவிற்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தார்.
தொழில்
[தொகு]இரீட்டா ஃபரியா இப்போது மும்பை என்று அழைக்கப்படும் பம்பாயில் பிறந்தார். பாம்பே அழகி கிரீடத்தை வென்ற பிறகு, இவர் ஈவ்சு வீக்லி இந்திய அழகிப் போட்டியில் 1966 ஆம் ஆண்டில் பங்கேற்று அப்போட்டியிலும் வென்றார். ஃபெமினா இந்திய அழகி போட்டி இதிலிருந்து வேறுபட்டதாகும் அப்போட்டியை யாசுமின் டாயி வென்றார்.
உலக அழகி 1966 போட்டியின் போது, சேலை அழகி, நீச்சலுடை அழகி' மற்றும் 'மாலை நேர ஆடையழகி என்ற துணைப் பட்டங்களையும் இரீட்டா வென்றார். மற்ற நாடுகளைச் சேர்ந்த 51 போட்டியாளர்களைத் தோற்கடித்து, நிகழ்வின் உச்சத்தில் இரீட்டா, உலக அழகி 1966 கிரீடத்தை வென்றார். [4]
உலக அழகியான ஓர் ஆண்டு காலத்திற்குப் பிறகு, திரைப் படங்களில் நடிக்க பல்வேறு சலுகைகளைப் பெறத் தொடங்கினார். இரீட்டா ஃபரியா லாபகரமான வடிவழகு மாதிரி மற்றும் நடிப்பு ஒப்பந்தங்களை மறுத்து, அதற்கு பதிலாக மருத்துவப் படிப்பில் கவனம் செலுத்தினார். கிராண்ட் மருத்துவக் கல்லூரி & சர் ஜேஜே குழும மர்ருத்துவ மனைகள் கல்லூரியின் மாணவராக இருந்தார், அங்கு இரீட்டா மருத்துவப் பட்டம் பெற்றார். அதன் பிறகு இவர் இலண்டனின் கிங்சு கல்லூரி மருத்துவமனையில் படிக்கச் சென்றார். தனது வழிகாட்டியான டேவிட் பவலை 1971 ஆம் ஆண்டு மணந்தார், 1973 ஆம் ஆண்டு இந்த மருத்துவ இணை டப்ளின் நகருக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு இவர் தனது மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினார். [5]
இரீட்டா 1998 ஆம் ஆண்டு பெமினா இந்திய அழகிப் போட்டியில் ஒரு நீதிபதியாக இருந்தார், மேலும் சில சமயங்களில் உலக அழகிப் போட்டியை தீர்ப்பதற்கும் வந்தார். உதாரணமாக, 1976 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த உலக அழகி இறுதிப் போட்டியில் டெமிசு ரூசோசூடன் இவர் நீதிபதியாக இருந்தார், அப்போட்டியில் சிண்டி பிரேக்சுபியர் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இரீட்டா இப்போது அயர்லாந்தின் டப்ளினில் வசிக்கிறார். இவரது கணவர் ஓர் உட்சுரப்பியல் நிபுணர் ஆவார். டேவிட் பாவலுடன் இவருக்கு 1971 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. [6] இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் (தீர்த்டே மற்றும் ஆன் மேரி) பிறந்தனர். ஐந்து பேரக்குழந்தைகள் பேட்ரிக், கோர்மக், டேவிட், மரியா மற்றும் ஜானி என்ற பெயரில் உள்ளனர். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Makers of India - Women of Fame". Indian Mirror. பார்க்கப்பட்ட நாள் 6 May 2018.
- ↑ Goa Miscellania
- ↑ "Not Just a Pretty Face: Reita Faria, the first Asian to win Miss World". Indian Express. 18 November 2018.
- ↑ "51 Years Before Manushi, Reita Faria Was India's First Miss World". The Quint. 18 November 2018.
- ↑ "Lost and found: Thirty newsmakers from the pages of Indian history and where they are now: Cover Story". India Today. 3 July 2006. பார்க்கப்பட்ட நாள் 2013-12-16.
- ↑ "The first Indian to win the Miss World title". Rediff News. 12 December 2006. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
- ↑ "Miss World 1966 - Reita Faria - India". Miss World. 2009. Archived from the original on 5 August 2010. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.