உள்ளடக்கத்துக்குச் செல்

இரீடு சமதோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரீடு சமதோவ்
நாடுஅசர்பைசான்
பிறப்பு2007
பட்டம்பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் (2023)
உச்சத் தரவுகோள்2523 (செப்டம்பர் 2025)

இரீடு சமதோவ் (Read Samadov) என்பவர் அசர்பைசான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2007 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 2023 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு இவருக்கு பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செசபிள் மாசுட்டர்கள் தகுதிச் சுற்றுப் போட்டியில் இவர் முதல் இடத்தைப் பிடித்தார். சமநிலை முறிவு ஆட்டத்திற்குப் பின்னர் சபர்மிராட் அட்டாபயேவிடம் பட்டத்தை இழந்தார்.[1]

2025 மார்ச்சு மாதத்தில் ஐரோப்பிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் எட்டு கிராண்டு மாசுட்டர்களுடன் (தேனியல் யூஃபா மற்றும் பெஞ்சமின் கிளெடுரா உட்பட) நான்காவது இடத்தைப் பிடித்தார்.[2] இந்த முடிவின் மூலம், இவர் சதுரங்க உலகக் கோப்பை 2025 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Colodro, Carlos (February 17, 2025). "Chessable Masters: Atabayev, Samadov and Suyarov make it to the Play-In".
  2. "Matthias Bluebaum wins 2025 European Championship". March 27, 2025.
  3. "Two more Azerbaijani chess players secure spots in World Cup". March 27, 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீடு_சமதோவ்&oldid=4400223" இலிருந்து மீள்விக்கப்பட்டது