உள்ளடக்கத்துக்குச் செல்

இரினா பல்மகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரினா பல்மகா
2022
பிறப்பு11 நவம்பர் 1993 (1993-11-11) (அகவை 30)

இரினா பல்மகா (Irina Bulmaga) என்பவர் கிழக்கு ஐரோப்பாவின் மல்தோவா குடியரசில் பிறந்த உருமேனியா நாட்டு பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்தை 2012 ஆம் ஆண்டிலும் [1], அனைத்துலக சதுரங்க மாசுட்டர் பட்டத்தை 2013 ஆம் ஆண்டிலும் இரினா அடைந்தார் [2].

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

2001 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இவர் பலமுறை மல்தோவா இளைய மகளிர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். 2005, 2006, 2007 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை இவர் உலக பள்ளிகள் இடையிலான சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். இதேபோல தொடர்ச்சியாக இரண்டு முறை மல்தோவா பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் வென்றார். 2009 ஆம் ஆண்டு முதல் உருமேனியா நாட்டின் சார்பாக சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுகிறார். 2010 முதல் உருமேனியாவின் விரைவு சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2014 இல் ஏழாம் ஆண்டு மகளிர் அனைத்துலக சதுரங்கப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றார். இப்போட்டி கிழக்கு உருமேனியாவிலுள்ள பிரேய்லா நகரில் நடைபெற்றது[3]. 2008, 2010, 2012, 2014, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் ஐந்து முறை உருமேனியாவின் சார்பாக இரினா கலந்து கொண்டார். 2014 இல் வெண்கலப் பதக்கம் இவருக்குக் கிடைத்தது. 2011- 2015 ஆம் ஆண்டு காலத்தில் நடைபெற்ற மூன்று ஐரோப்பிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டிகளிலும் இரினா விளையாடினார். 2013 உலக மகளிர் அணி சாம்பியன் போட்டியில் உருமேனியா நாட்டு அணியில் இவர் விளையாடினார்.

இரினா பல்மகாவின் சகோதரி எலீனா பல்மகாவும் ஒரு சதுரங்க வீராங்கனை ஆவார்[4][5].

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரினா_பல்மகா&oldid=3455629" இலிருந்து மீள்விக்கப்பட்டது