இரித்தி நரசிம்ம மல்லர்
| இரித்தி நரசிம்ம மல்லர் | |
|---|---|
| இலலித்பூரின் அரசன் | |
| ஆட்சிக்காலம் | 1715–1717 |
| முன்னையவர் | வீர மகேந்திர மல்லர் |
| பின்னையவர் | பாஸ்கர மல்லர் |
| பிறப்பு | நேபாளம் |
| இறப்பு | 1717 |
| அரசமரபு | மல்லர் வம்சம் |
| தந்தை | உருத்ரேந்திர மல்லர் |
இரித்தி நரசிம்ம மல்லர் (Riddhi Narasimha Malla கிருதி நரசிம்மர் என்றும் உச்சரிக்கப்படும் இவர் மல்லர் வம்சத்தைச் மன்னர் ஆவார். இலலித்பூரின் மன்னர் வீர மகேந்திர மல்லனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இவர், 1715 முதல் 1717 இல் தான் இறக்கும் வரை ஆட்சி செய்தார்.[1][2][3]
வாழ்க்கை
[தொகு]இரித்தி நரசிம்மர், உருரேந்திர மல்லரின் மகனும், யோக நரேந்திர மல்லனின் சகோதரியான உருத்ரமதியின் பேரனும் ஆவார். தனது முன்னோடிகளைப் போலவே இவரும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும் மத இடங்களுக்கு பல்வேறு பொருட்களை நன்கொடையாக வழங்கினார்.[2]
வாரிசு
[தொகு]1717இல் இரித்தி நரசிம்மர் இறந்த பிறகு, முறையான வாரிசுகள் யாரும் இல்லை. இலலித்பூரின் காஜிகள், அப்போதைய வாரிசான இரணஜித் மல்லன் அரசனாக பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்பினர். ஆனாலும் யோகமதியின் செல்வாக்கின் காரணமாக, காந்திபூரைச் சேர்ந்த பாஸ்கர மல்லர் மன்னராக அறிவிக்கப்பட்டார். பாஸ்கர மல்லர் இலலித்பூரின் மகேந்திர சிம்ம மல்லர் என்ற பெயரில் ஆட்சி செய்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF) (in English). Kathmandu, Nepal: University of Cambridge. p. 76.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 Burleigh, Peter (16 February 2022). "A Chronology of Later Kings of Patan". கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். https://www.repository.cam.ac.uk/bitstream/handle/1810/227429/kailash_04_01_02.pdf?sequence=2.
- ↑ Regmi, Mahesh C.. "Regmi Research Series". German Oriental Society 5: 202–203. https://studylib.net/doc/8525992/regmi_05.