உள்ளடக்கத்துக்குச் செல்

இரிது நேகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024ஆம் ஆண்டில் இரிது நேகி

இரிது நேகி (Ritu Negi) என்பவர் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கபடி வீராங்கனை ஆவார். 1992ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியின் தலைவராக இருந்தார்.[1] 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி சீன தாய்பெயை தோற்கடித்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாநில வீராங்கனைகளை இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கௌரவித்தார். இரிது நேகிக்கு ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது [2]

தொழில்

[தொகு]

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய கபடி அணியிலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற அணியிலும் இரிது நேகி ஓர் உறுப்பினராக இருந்தார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இரிது நேகி இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள திரான்சுகிரி பகுதியில் உள்ள சில்லை பகுதியில் உள்ள சரோக்கு கிராமத்தைச் சேர்ந்தவர்.[4] ஒரு கபடி வீரரான ரோகித்து குலியாவை திருமணம் செய்து கொண்டார்.[5]

விருது

[தொகு]

ஜனவரி 9, 2024ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் இரிது நேகிக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ani (2023-10-06). "Asian Games | Indian women thump Nepal; storms into kabaddi final" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/asian-games-indian-women-thump-nepal-storms-into-kabaddi-final/article67387448.ece.
  2. "Himachal Pradesh CM Sukhu felicitates state's Asian Games players | Take One". www.takeonedigitalnetwork.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-10-16. Retrieved 2023-10-17. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Indian Kabaddi teams bag gold in South Asian Games". Sportstar (in ஆங்கிலம்). 2019-12-09. Retrieved 2023-10-06.
  4. Tonite, Himachal (2023-08-26). "Three Girls from Shillai Secure Spot in Indian Team Women's Kabaddi". Himachal Tonite (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-10-17.
  5. Singh, Krishan (2022-04-23). "सिरमौर: कबड्डी स्टार रितु नेगी ने हरियाणा के रोहित गुलिया के साथ लिए सात फेरे". Amar Ujala (in இந்தி). Retrieved 2023-10-06.
  6. "Arjuna Awards 2023: President Murmu confers India's 2nd highest sports honour to cricketer Shami, archer Ojas Pravin Deotale". The Economic Times. 2024-01-09. https://economictimes.indiatimes.com/news/sports/arjuna-awards-2023-president-murmu-confers-national-sports-and-adventure-awards-cricketer-mohammed-shami-archer-ojas-pravin-deotale-receive-honour/articleshow/106656729.cms?from=mdr.
  7. "Full list of Arjuna Awards Winners 2023". India Today (in ஆங்கிலம்). 9 January 2024. Retrieved 2024-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிது_நேகி&oldid=4569577" இலிருந்து மீள்விக்கப்பட்டது