இரிது சரின்

இரிது சரின் (Ritu Sarin)[1] இந்தியாவின் தரம்சாலாவைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளாரும் மற்றும் கலைஞரும் ஆவார். இவர் தர்மசாலா சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநராக உள்ளார்.
வாழ்க்கை
[தொகு]இரிது சரின், புது தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் இளங்கலை படிப்பை முடித்த இவர், கலிபோர்னியா கலைக் கல்லூரியில் (முன்பு ஓக்லாந்து, கலிபோர்னிய கலை மற்றும் கைவினை கல்லூரி) திரைப்படம் மற்றும் காணொளியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மிராண்டா ஹவுஸின் 2010 மதிப்புமிக்க முன்னாள் மாணவர் விருதைப் பெற்றுள்ளார். இவர் திபெத்திய திரைப்படத் தயாரிப்பாளர் டென்சிங் சோனம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திரைப்படங்கள்
[தொகு]கலிபோர்னிய கலை மற்றும் கைவினை கல்லூரியில் இருந்தபோது, ஹெர்குலஸ் மற்றும் தி மைண்ட் கேப் உள்ளிட்ட பல சோதனைத் திரைப்படங்களை உருவாக்கினார்.
1985 ஆம் ஆண்டில், இவரும் இவரின் கணவர் டென்சிங் சோனம் இருவரும் தி நியூ பியூரிடன்ஸ்: தி சீக் ஆஃப் யூபா சிட்டி என்ற முதல் படத்தில் ஒரு கூட்டு ஆய்வறிக்கை திட்டமாக இணைந்து பணியாற்றினர். இந்த படம் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் பொது ஒளிபரப்புச் சேவையில் ஒளிபரப்பப்பட்டது.
1987 ஆம் ஆண்டில், சரினும் சோனமும் இலண்டனுக்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் பெளத்தம் மற்றும் திபெத்து தொடர்பான திரைப்படக் காப்பகம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ‘மெரிடியன் அறக்கட்டளை’ என்ற தயாரிப்பு நிறுவனத்தில் திட்ட இயக்குநர்களாக பணிபுரிந்தனர். மெரிடியன் அறக்கட்டளையில் இருந்தபோது, நோபல் பரிசு பெற நோர்வேவிற்கு தலாய் லாமா வருகை புரிந்தது, மற்றும் உருசிய பெளத்த குடியரசுகளான கல்மிகியா மற்றும் புரியாட்டியாவுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் உட்பட பல வரலாற்று பயணங்களை இவர்கள் ஆவணப்படுத்தினர். இவர்கள் 1991 இல் மெரிடியன் அறக்கட்டளையை விட்டு வெளியேறி, வைட் கிரேன் பிலிம்ஸ் என்ற தங்கள் சொந்த நிறுவனத்தை நிறுவினர். அதன் பின்னர் இவர்களின் அனைத்து படங்களும் இவர்களாது சொந்த நிறுவனத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஆவணப்படங்கள், காணொளி நிறுவல்கள் மற்றும் இரண்டு வியத்தகு திரைப்படங்கள் ஆகியவியும் இதில் அடங்கும்.
திபெத்து இவர்களின் படைப்புகளில் தொடர்ச்சியான பொருளாக உள்ளது. அதனுடன் இவர்கள் தனிப்பட்ட முறையில், அரசியல் ரீதியாகவும், கலை ரீதியாகவும் பல்வேறு வழிகளில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளனர். திபெத்திய மக்கள் எதிர்கொள்ளும் நாடுகடத்தல், அடையாளம், கலாச்சாரம் மற்றும் தேசியவாதம் பற்றிய கேள்விகளை ஆவணப்படுத்தவும், கேள்வி கேட்கவும், பிரதிபலிக்கவும் இவர்கள் தங்கள் திரைப்படங்கள் மற்றும் கலைப்படைப்புகள் மூலம் முயற்சித்துள்ளனர்.
இவர்களின் சமீபத்திய படமான தி ஸ்வீட் ரெக்கியம், 2018 தொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் அதன் உலக அரங்கேற்றத்தைக் கொண்டிருந்தது.
இரிது சரின் 2019 சிட்னி திரைப்பட விழாவில் சர்வதேசப் போட்டி பிரிவின் நடுவர் குழுவில் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sarin, Ritu, 1960- film director, film producer. Tenzing Sonam, film director, screenwriter, narrator. Bstan-ʼdzin-rgya-mtsho, Dalai Lama XIV, 1935- on-screen participant., The sun behind the clouds : Tibet's struggle for freedom, கணினி நூலகம் 653103818, retrieved 2019-05-29
{{citation}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)