உள்ளடக்கத்துக்குச் செல்

இரிடியம் செயற்கைக் கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரிடியம் செயற்கைக் கோள்கள் ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாண்டில் பதீஸ்டாவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஓர் வணிக நிறுவனத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. தற்பொழுது 66 தொடர்பில் இருக்கும் செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது. இதிலுள்ள ஓர் குணாதியசம் என்னவென்றால் உலகின் துருவப்பகுதியிலே வேறெந்தப் பகுதியிலேயே முழமையான தொடர்பாடல் வசதிகளைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் 77 செய்மதிகளைப் பாவிப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்ததால் ஆவர்த்தன அட்டவணையில் 77ஆவது மூலகமான இரிடியத்தின் கருவைச் சுற்றி வரும் இலத்திரன்களைப் போலவே இங்கும் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கோள் என்பதால் பெயரைத் தேர்ந்தெடுக்கபட்டது.

இந்தச் செய்மதிகள் இரவில் மின்மினிப் பூச்சிகளைப் போல வானில் மின்னிக் கொண்டு செல்வதை வைத்து இலகுவாக அடையாளம் காணலாம்.

சரித்திரம்[தொகு]

இரிடியம் செய்மதிச் சேவையானது 1 நவம்பர் 1998 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது செய்மதிச் சேவயை அன்றைய அமெரிக்கப் பிரதி அதிபர் அல்கோர் ஆரம்பத்து வைத்தார். இதற்கான நிதி, தொழில்நுடப் உதவிகளை மோட்ரோலா நிறுவனம் வழங்கியது.

10 பெப்ரவரி 2009 இல் இரிடியம் செய்மதிகளுள் ஒன்று சேர்பியாவிற்கு 800 கிலோமிட்டர் மேலே பழுதடைந்த ரஷ்ய செயற்கைக் கோளுடன் மோதிக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்_செயற்கைக்_கோள்&oldid=2916810" இலிருந்து மீள்விக்கப்பட்டது