இரிச்சா மகேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிச்சா மகேசுவரி
பிறப்பு1988 செப்டம்பர் 23 (23-09-1988) (அகவை Error: Need valid year, month, day)
கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
பணிஒளிப்படக் கலைஞர்
வலைத்தளம்
www.richamaheshwari.com

இரிச்சா மகேசுவரி (Richa Maheshwari) என்பவர் இந்தியாவின் தலைநகரான தில்லியைச் சேர்ந்த ஆடை அலங்கார புகைப்படக் கலைஞர் ஆவார். இவர் கல்லூரிக்குப் படிப்பிற்குப் பிறகு வணிக ரீதியாக அலங்காரப் புகைப்படம் எடுத்தலிலும் குறும்படத் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கினார். இப்போது இரிச்சா மகேசுவரி பிலிம் & போட்டோகிராபி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை[தொகு]

மகேசுவரி உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் பிறந்தார். இங்கு இவரது தந்தை ஒரு தொழிலதிபர். ரிச்சா மகேசுவரி தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் உடையலங்காரம் தொடர்பான படிப்பினை மேற்கொள்ளும் போது திரைப்படம் மற்றும் ஒளிப்படம் எனும் நிறுவனத்தினை தொடங்கினார்.[1] கல்லூரியில் படிக்கும் போதே உடையலங்காரம் தொடர்பாகப் பயிற்சி செய்து, கல்லூரி படிப்பிற்கு பிறகு வணிக ரீதியாகக் குறும்படங்களை எடுக்க ஆரம்பித்தார். இவர் கல்லூரி படிப்பினை முடிப்பதற்குள் ஒரு சிறிய ஒளிப்படக்கலை நிறுவனத்தினை நிறுவினார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

மகேசுவரி தனது பணியைப் பொதுச் சேவையுடன் செயல்படுத்தி நன்கு அறியப்பட்டவராக உள்ளார். பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்திற்காகப் புகைப்படம் எடுத்துள்ளார்.[2][3][4][5][6] பாக்கித்தானில் லாலா துகிலியல் நிறுவனத்துடன் இணைந்து திசம்பர் 20 அன்று “ஆனிகல் 2015” நிகழ்வினைத் தொடங்கினார்.[7][8][9] விலங்குகளின் சோகமான நிலைக்கு ஒரு நாகரீகமான திருப்பத்தைக் கொண்டு வரும் நோக்கத்துடன், இவர் அனிகலை (ஒரு விலங்கு நல நாட்காட்டி) உருவாக்கினார். மகேசுவரி 17 திசம்பர் 2015 அன்று பாக்கித்தானின் லாலா துகிலியுடன் இணைந்து குருட்டுத்தன்மை பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட "சைலன்சிங் தி டார்க்" என்ற மற்றொரு நாட்காட்டியினை அறிமுகப்படுத்தினார்.[10][11][12][13] குருட்டுத்தன்மை விழிப்புணர்வு மற்றும் உலகில் பார்வையற்றவர்களின் வருந்தத்தக்க நிலையை மையமாகக் கொண்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார்.[13] நாட்காட்டியின் வெளியீட்டைத் தொடர்ந்து ஒரு சிறிய ஆவணப்படம் மற்றும் ஆடை அலங்கார வடிவமைப்பு கண்காட்சியினை பார்வையற்ற குழந்தைகள் வடிவழகர்களுடன் நடத்தினார்.[10][14] பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் நலனுக்காக இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.[15]

விருதுகள்[தொகு]

மகேசுவரி ஒரு உடற்பயிற்சி சாதனையாளர். அதிகபட்ச பர்பிகளை முயன்றதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இது ஒரு நிமிடத்தில் 46 ஆகும். ஒரு நிமிடத்தில் உலகின் அதிகபட்சம் ஒரு பெண் 38 ஆகும்.[3][16][17][18][19] இவர் தகவல் தொடர்பு வடிவமைப்பில் தங்கப் பதக்கம், தேசிய விருதினை வென்றவர். வேதாந்தாவால் நடத்தப்பட்ட ஆவணப்படம் மற்றும் திரைப்படம் தயாரித்தல் பிரிவில் முதல் பரிசினை வென்றார். இவரது ஆராய்ச்சி முயற்சிகளில் தேசிய உடையலங்கார கல்லூரி வழங்கிய அதிவேக புகைப்படம் எடுத்தல் மற்றும் காலக்கடப்பு ஒளிப்படவியல் புகைப்படம் எடுப்பதில் விருதுகள் பெற்றார். இந்நிறுவனத்தின் தகவல்தொடர்பு வடிவமைப்பில் தங்கப் பதக்கம் வென்றார் மகேசுவரி. மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இளம் பெண் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டார்.[3][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. . 2018-12-07. 
  2. "These visually challenged kids are learning to click pictures with a regular camera". 5 March 2019.
  3. 3.0 3.1 3.2 Kapoor, Aekta (7 January 2019). "This Fashion Photographer Teaches the Blind How to Click Brilliant Images".
  4. Sethia, Kinjal (5 December 2018). "Richa Maheshwari, An Award Winning Fashion Photographer, Shares The Tricks To Her Trade".
  5. "Richa Maheshwari is teaching visually impaired children to shoot great photos. And the pics are #inspiring". The New Indian Express.
  6. 6.0 6.1 "This fashion photographer teaches the blind how to click brilliant images". cnbctv18.com.
  7. "Abdul Basit High Commissioner, High Commission of Pakistan has launched Anical 2015". Fashion Gaze. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
  8. "Richa Maheshwari plays perfect host at an evening dedicated to animal welfare in Delhi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
  9. "Anical calendar 2015 for animal welfare". The Asian Age. Archived from the original on 2 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
  10. 10.0 10.1 "Awareness about eye donation: An eye opener". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26.
  11. "Calendar with a cause". The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26 – via Pressreader.
  12. http://onlineepaper.asianage.com/articledetailpage.aspx?id=4374973[தொடர்பிழந்த இணைப்பு], The Asian Age.
  13. 13.0 13.1 "Lala Textiles and Richa Maheshwari Launch Silencing The Darkcampaign a Blindness awareness initiative". tennews.in. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26.
  14. "Introducing Gul Mohar by LALA at 'Silencing the Dark' India – An initiative raising awareness for the blind!". Dispatch News Desk (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-12-17. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  15. "Fashion connects with a social cause". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  16. Maheshwari, Richa. "Richa Maheshwari". Entrepreneur.
  17. "Richa Maheshwari tells us how she beat the odds to become an award-winning photographer and fitness record holder". www.indulgexpress.com.
  18. "From photography to fitness, Richa Maheshwari is setting new records". 16 February 2019.
  19. "Lenswoman, Richa Maheshwari sets new world record of maximum burpees in a minute – Live World News". Archived from the original on 2021-07-28. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிச்சா_மகேசுவரி&oldid=3742597" இலிருந்து மீள்விக்கப்பட்டது