உள்ளடக்கத்துக்குச் செல்

இரா திரிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா திரிவேதி
2012 இல் பெங்களூரில் நடைபெற்ற டெட் திறமை தேடல் மாநாட்டில் திரிவேதி
2012 இல் பெங்களூரில் நடைபெற்ற டெட் திறமை தேடல் மாநாட்டில் திரிவேதி
பிறப்பு1984 (அகவை 41–42)
இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
தொழில்ஆசிரியர், கட்டுரையாளர், யோகா ஆசிரியர்
கல்வி
வகைபுனைகதை மற்றும் புனைகதை அல்லாதவை
துணைவர்
மது மந்தினா (தி. 2023)
இணையதளம்
www.iratrivedi.in

இரா திரிவேதி (Ira Trivedi) இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரும், கட்டுரையாளரும் மற்றும் யோகா ஆசிரியரும் ஆவார். தனது படைப்புகளில் இந்தியாவில் பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து எழுதினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

திரிவேதி, இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் பிறந்தார்.[1] இந்தி எழுத்தாளர் கிராந்தி திரிவேதி இவரது பாட்டியாவார்.[2]

திரிவேதி அமெரிக்காவில் வெல்லஸ்லி கல்லூரியில் மாணவியாக இருந்தபோது யோகா பயிற்சி செய்யத் தொடங்கினார்.[1] இவர் 2006 இல் வெல்லஸ்லி கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.[3] இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்றார்.[4][5]

மேலும், சென்னையின் சிவானந்தா யோகா வேதாந்த மையத்தில் ஆச்சார்யர் பயிற்சியையும் முடித்தார்.[6]

தொழில்

[தொகு]

இவர் மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் பங்கு பெற்றுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், முதல் புனைகதை நாவலினை[7][8] தனது 19 [9] ஆம் வயதில் எழுதினார். இதை டெக்கன் ஹெரால்டு தனது புத்தக மதிப்புரையில் "வைரங்களுக்குப் பின்னால் உள்ள தூசியையும், செயற்கையான நெகிழிப் புன்னகைகளுக்குப் பின்னால் உள்ள கண்ணீரையும், உண்மையில் அழகிப் போட்டிகளில் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதற்கான அழுக்கையும் வெளிப்படுத்தும் முதல் பொழுதுபோக்கு நூல்" என்று விவரித்தது.[10]

படைப்புக்கள்

[தொகு]

இவரது படைப்புகளில், இந்தியா இன் லவ்: மேரேஜ் அண்ட் செக்சுவாலிட்டி இன் தி 21ஸ்ட் செஞ்சுரி, வாட் வுட் யூ டூ டு சேவ் தி வேர்ல்ட்?, தி கிரேட் இந்தியன் லவ் ஸ்டோரி, மற்றும் தேர்ஸ் நோ லவ் ஆன் வால் ஸ்ட்ரீட் ஆகியவை அடங்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

2023 ஆம் ஆண்டு சூன் 11 அன்று, திரிவேதி மும்பையில் திரைப்படத் தயாரிப்பாளர் மது மந்தினா என்பவரை மணந்தார். இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

விருதுகள் மற்றும் சிறப்பு

[தொகு]

2015 ஆம் ஆண்டில், திரிவேதி சுறுசுறுப்பு மற்றும் புதுமைக்கான தேவி விருதை வென்றார்.[11] அதே ஆண்டு, இந்தியாவில் மணமகள் கடத்தல் தொடர்பான சிறந்த புலனாய்வு கட்டுரைக்கான ஐக்கிய இராச்சியம் ஊடக விருதைப் பெற்றார்.[12]

2017 ஆம் ஆண்டில், திரிவேதி பிபிசியின் உலகின் 100 செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "How Starting Yoga at an Early Age can Change the Way You Handle Stress". News18. IANS. September 12, 2019. https://www.news18.com/news/lifestyle/how-starting-yoga-at-an-early-age-can-change-the-way-you-handle-stress-2306495.html. 
  2. Sharma, Swati (December 14, 2016). "Ideas strike you when you least expect it, says Ira Trivedi". The Asian Age. https://www.asianage.com/books/141216/ideas-strike-you-when-you-least-expect-it.html. 
  3. "Author and Speaker Ira Trivedi Reflects on Wellesley Experience". Wellesley College (in ஆங்கிலம்). Archived from the original on 16 August 2017. Retrieved 2019-10-10.
  4. "Trivedi Credits Wellesley with Enriching Her Professional Life". Wellesley College. August 22, 2012 இம் மூலத்தில் இருந்து 29 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190729005515/https://www.wellesley.edu/news/stories/node/28628. 
  5. Roy, NilanjanaI S. (August 14, 2012). "In India, the Tender Trap's a Vise". The New York Times. https://www.nytimes.com/2012/08/15/world/asia/15iht-letter15.html. 
  6. "International Yoga Day: 3 poses for fitness in under 6 minutes". Hindustan Times. June 21, 2018. https://www.hindustantimes.com/videos/fitness/international-yoga-day-3-poses-for-fitness-in-under-6-minutes/video-E65sw9v4YHq8F9K4PKzqRK.html. 
  7. Yadav, Shivani (November 2, 2009). "Confessions of a writer". தி இந்து. https://www.thehindu.com/books/Confessions-of-a-writer/article16889910.ece. 
  8. Menon, Hari (June 12, 2006). "The Cat Who Missed The Cream". Outlook இம் மூலத்தில் இருந்து February 2, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160202021025/http://mcomments.outlookindia.com/story.aspx?sid=4&aid=231516. 
  9. Batish, Ashima (March 24, 2012). "On write lines". The Tribune. https://www.tribuneindia.com/2012/20120324/ttlife1.htm. 
  10. "BOOK RACK". டெக்கன் ஹெரால்டு. May 21, 2006 இம் மூலத்தில் இருந்து March 4, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304205210/http://archive.deccanherald.com/deccanherald/may212006/books1346522006518.asp. 
  11. "The Devis".
  12. "Media Awards". Archived from the original on 28 May 2016. Retrieved 13 June 2016.
  13. "BBC 100 Women 2017: Who is on the list?". 27 September 2017 இம் மூலத்தில் இருந்து 24 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230624093249/https://www.bbc.com/news/world-41380265. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா_திரிவேதி&oldid=4378612" இலிருந்து மீள்விக்கப்பட்டது