உள்ளடக்கத்துக்குச் செல்

இரா கெங்கர் படிக்கிணறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா கெங்கர் படிக்கிணறு
Map
பொதுவான தகவல்கள்
வகைபவோலி
கட்டிடக்கலை பாணிஇந்தியக் கட்டிடக்கலை
இடம்வந்தாலி அருகேயுள்ள கொய்லிபதாக், ஜூனாகத் மாவட்டம், குசராத்து
நாடுIndia
ஆள்கூற்று21°29′30″N 70°23′00″E / 21.4917454°N 70.3833079°E / 21.4917454; 70.3833079
கட்டுமான ஆரம்பம்சுமார் 1230 பொ.ச.
நிறைவுற்றதுசுமார் 1240 பொ.ச.
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)உள்ளூர் கட்டுமானம்
முதன்மை ஒப்பந்தகாரர்தேஜபாலன்
பதவிகள்மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம், எண். S-GJ-170, இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

இரா கெங்கர் படிக்கிணறு (Ra Khengar Vav) அல்லது இரா கெங்கர் வாவ் என்பது இந்தியாவின் குசராத்தில் வந்தாலி , ஜூனாகத் இடையே உள்ள கொய்லிபதாக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படிக்கட்டுக் கிணறு ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

வகேலா அரசவையில் அமைச்சராக இருந்த தேஜபாலன் தனது சகோதரர் வாஸ்துபாலனுடன் இணைந்து பயணிகளின் நலனுக்காக இந்தப் படிக்கட்டுக் கிணற்றைக் கட்டினார். இது 13ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் 1230க்கும் 1240 க்கும் இடையில் கட்டப்பட்டது. தேஜலாபுரம் அல்லது ஜிர்னாதுர்கம் (நவீன ஜூனாகத்), வாமனஸ்தலி (நவீன வந்தலி) ஆகியவற்றுக்கு இடையே உள்ள படிக்கட்டுக் கிணறு கட்டுமானமானது, வாஸ்துபானனின் வாழ்க்கை வரலாற்றான ஜினஹர்ஷனின் வாஸ்துபால-சரிதத்தில் (விக்ரம் நாட்காட்டி 1497 அல்லது கிபி 1441 ) குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது மதுசூதன் தாக்கி என்பவரால் ரா கெங்கர் படிக் கிணற்றுடன் அடையாளம் காணப்பட்டது. மேலும், 1230க்கும் 1240க்கும் இடையில் தேதியிட்டது.[2] [3] கிபி 1098 முதல் 1125 வரை ஆட்சி செய்த சுதாச ஆட்சியாளர் கெங்கரன் என்பவரால் இந்த கட்டுமானம் கட்டப்பட்டதாக தவறாகக் கூறப்படுகிறது.[4] [5]

இது மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக குசராத் அரசாங்கத்தின் விவசாயத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

கட்டிடக்கலை

[தொகு]

இந்த படிக்கட்டுக்கிணறு வடக்கு-தெற்கு திசையில் கட்டப்பட்டுள்ளது. வடக்கில் படிகளும் தெற்கில் சுழல் தண்டும் உள்ளது. படிக்கட்டுக் கிணற்றின் தூண்களும், சுவர்களும் சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. படிகள் மூலம் முதலில் இறங்கும் இடத்தில் இருபுறமும் மாடங்களும் உள்ளன. தெற்கு முனையில் ஓடு வேயப்பட்ட கூரையுடன் கூடிய ஒரு கூடமும், ஜூனாகத்தில் பாபி வம்சத்தின் ஆட்சியின் போது 19 ஆம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது. [6] கிணற்றுத் தண்டைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையும் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Vanthali: The vav as a highway watering hole - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12.
  2. Monica Juneja (2001). Architecture in Medieval India: Forms, Contexts, Histories. Permanent Black. p. 503. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-010-7.
  3. Jain-Neubauer (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-391-02284-3.
  4. India (1884). Gazetteer of the Bombay Presidency. Government Central Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 134049129X.
  5. Shambhuprasad Harprasad (1968). Saurāshtr̥ano itihāsa. Soraṭha Śikshaṇa ane Saṃskr̥ti Saṅgha.
  6. "Vanthali: The vav as a highway watering hole - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12."Vanthali: The vav as a highway watering hole - Times of India". The Times of India. Retrieved 2019-01-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா_கெங்கர்_படிக்கிணறு&oldid=3319655" இலிருந்து மீள்விக்கப்பட்டது