உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. பூர்ணிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். பூர்ணிமா ( R. Poornima) என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசர் ஆவார்.

இளமையும் கல்வியும்

[தொகு]

இராஜசேகர், சந்திரா தம்பதியரின் மகளாகத் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பூர்ணிமா பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஊட்டியில் உள்ள பெத்லகாம் மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தார். 1989ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் மைசூரில் உள்ள ஜே. எஸ். எஸ். சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் பட்டப்படிப்பை முடித்து 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் குழுமத்தில் வழக்கறிஞராகப் பதிவுசெய்தார். வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கி 11ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர் 2016ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைச் சட்டப் படிப்பினை முடித்தார்.[1]

நீதிபதி பதவி

[தொகு]

நேரடி மாவட்ட நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டு, 2011-ஆம் ஆண்டு நீதித்துறையில் சேர்ந்த இவர், ஈரோட்டில் பயிற்சி மாவட்ட நீதிபதியாக ஓராண்டு பணியாற்றினார். இதன் பின்னர் பெரம்பலூர் மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதியாகவும், திருச்சியில் 1 கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் (தீண்டாமை, வன்கொடுமை) திண்டுக்கல், கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளர் பதவியை வகித்து, சென்னை மாநில போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இதன் பின்னர் 23.09.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Madras High Court". hcmadras.tn.gov.in. 2025-04-17. Retrieved 2025-04-17.
  2. https://cdnbbsr.s3waas.gov.in/s35d6646aad9bcc0be55b2c82f69750387/uploads/2024/09/202409211118621211.pdf
  3. Bureau, The Hindu (2025-04-17). "Madras High Court ACJ administers oath of office to three new judges". The Hindu (in Indian English). Retrieved 2025-04-17. {{cite web}}: |last= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._பூர்ணிமா&oldid=4280689" இலிருந்து மீள்விக்கப்பட்டது