உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. நிமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. நிமல்
பிறப்புநாடியம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
பணிசுற்றுச்சூழல் ஆர்வலர்

இரா. நிமல் (R. Nimal) புகழ் பெற்றவராக நிமல் இராகவன் (Nimal Raghavan) என அறியப்படும் இவர், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இந்தியாவிலும் மற்றும் உலக அளவிலும் 250 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் முன்னணியில் இருந்து, "இந்தியாவின் நீர் வீரன்" என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.தமிழ்நாட்டின் வறண்ட கிராமங்களிலும், கென்யாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களிலும் பணியாற்றியுள்ள இவர், அங்குள்ள மக்கள் இவரை 'வா முவா' அதாவது மழையின் மகன் என்று அழைக்கிறார்கள்.[1]

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான நாடியம் பகுதியைச் சேர்ந்த நிமல் இராகவன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் ஒரு தொழில்நுட்ப வல்லுநராக இருந்தவர். நவம்பர் 2018 இல் கஜா புயலால் பாதிப்படைந்த தனது சொந்த ஊரைப் பார்த்த நிமல், காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் உள்ள 90 கிராமங்களை மீட்டெடுப்பதன் மூலம் தனது சுற்றுச்சூழல் பயணத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.[2]

விருது

[தொகு]

உலகின் மிகப்பெரிய நேர்மறை மற்றும் தீர்வு சார்ந்த உள்ளடக்கத்தால் இயக்கப்படும் தாக்கத் தளமான 'தி பெட்டர் இந்தியா' அமைப்பு, நீர் பாதுகாப்பு, நீர் சேகரிப்பு, நீர்நிலைகளைப் புனரமைத்தல், நீர் நெருக்கடி மேலாண்மை, நீர் திட்டமிடல், கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் முன்மாதிரியான பணிகளைச் செய்த இந்தியாவின் அறியப்படாத நாயகர்களைக் கௌரவிக்கும் விதமாக 'இந்தியாவின் நீர் வீரர்கள்' என்ற விருதை, ஆகத்து 9, 2022 அன்று தொடங்கி ஆகத்து 15, 2022 அன்று முடிவடையும் பரிந்துரைகளில் தேர்ச்சிப் பெற்று, இந்த விருதை இவர் பெற்றுள்ளார்.[3]

டைம்சு நெட்வொர்க் நிறுவனம் ஆகத்து 24, 2024 அன்று புது தில்லியில் 'அமேசிங் இந்தியன்சு விருதுகள்' விழாவை நடத்தியது. சமூகத்திற்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக பதின்மூன்று சிறந்த ஆளுமைகள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்துகொண்ட இந்த நிகழ்வில், இந்தியாவில் சுமார் 200 ஏரிகளை மீட்டெடுத்த நிமல் இராகவன், 2024 ஆம் ஆண்டுக்கான அற்புத இந்தியர்கள் (Amazing Indians) விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.[4]

விருதுகள்

[தொகு]
  • 2022: இந்தியாவின் நீர் வீரர்
  • 2024: அற்புத இந்தியர்

புற இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "We ended 30 years of drought in 107 days: Nimal Raghavan". frontline.thehindu.com (ஆங்கிலம்) Jul 01, 2025. Retrieved 2025-12-15.
  2. "Make Earth Green Again MEGA Foundation - Driving force". frontline.thehindu.com (ஆங்கிலம்) © 2019. Retrieved 2025-12-15.
  3. "About India's Water Warriors". www.campaign.thebetterindia.com (ஆங்கிலம்) © 2026. Retrieved 2026-01-27.
  4. "Nimal Raghavan, Tamil Nadu Engineer Who Restored Nearly 200 Lakes in India, Honoured At Amazing Indians Awards 2024". www.timesnownews.com (ஆங்கிலம்) Aug 24, 2024. Retrieved 2026-01-27.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._நிமல்&oldid=4454715" இலிருந்து மீள்விக்கப்பட்டது