இரா. நயினாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. நயினாமலை (R. Nainamalai)(பிறப்பு 01 சூலை 1926) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நயினாமலை சேலம் மாவட்டம் இராசிபுரம் பகுதியினைச் சேர்ந்தவர். இராசிபுரம் கழக உயர்நிலைப் பள்ளியிலும், சேலம் நகராட்சிக் கல்லூரியிலும், சென்னை இசுடான்லி மருத்துவக் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். மருத்துவரான இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 இராசிபுரம் திமுக 41,079 54.90[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 243. 
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._நயினாமலை&oldid=3482789" இலிருந்து மீள்விக்கப்பட்டது