உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. தி. கோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. தி. கோபாலன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்ஆர். சந்திரசேகரன்
பின்னவர்எஸ். சுப்பராயர்
தொகுதிகம்பம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-08-13)13 ஆகத்து 1943
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி

இரா. தி. கோபாலன் (R. T. Gopalan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்தவர். இவர் மத்தியப் பிரதேசம் குவாலியரில் உள்ள சிறீ இலட்சுமி பாய் உடற்கல்வி பயிற்சி நிலையத்தில் உடற்கல்வி பயிற்சி பெற்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 174-175.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._தி._கோபாலன்&oldid=4285928" இலிருந்து மீள்விக்கப்பட்டது