இரா. திருமுருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரா. திருமுருகன்
RThirumurugan.jpg
பிறப்பு மார்ச் 16, 1929
கூனிச்சம்பட்டு, புதுச்சேரி, இந்தியா
இறப்பு சூன் 3, 2009(2009-06-03) (அகவை 79) invalid month
புதுச்சேரி
தேசியம் இந்தியர்
மற்ற பெயர்கள் இரா. சுப்பிரமணியம்
பெற்றோர் அ.இராசு
அரங்கநாயகி

முனைவர் இரா. திருமுருகன் (மார்ச் 16, 1929 - ஜூன் 3, 2009) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர். குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

திருமுருகனார் புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் அ. இராசு, இரா.அரங்கநாயகி ஆகியோருக்குப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டார்.

இவர் பண்டிதம் (1951), கருநாடக இசை - குழல் மேனிலை (1958), பிரெஞ்சு மொழிப்பட்டயம் (1973), கலைமுதுவர், கல்வியியல் முதுவர், மொழியியல் சான்றிதழ் (1983), முனைவர் (1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர். 44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றி பின்னர் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டார்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுனராகவும், "தெளிதமிழ்" என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், "தமிழ்க்காவல்" என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

 1. நூறு சொல்வதெழுதல்கள், 1957
 2. இனிக்கும் இலக்கணம், 1981
 3. கம்பன் பாடிய வண்ணங்கள், 1987
 4. இலக்கண எண்ணங்கள்,1990
 5. பாவேந்தர் வழி பாரதி வழியா?, 1990
 6. சிந்து இலக்கியம், 1991
 7. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம், 1993
 8. சிந்துப்பாவியல், 1994
 9. மொழிப்பார்வைகள், 1995
 10. பாவலர் பண்ணை, 1997
 11. மொழிப்புலங்கள், 1999
 12. இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள், 2001

மொழி வளர்ச்சி[தொகு]

 1. என் தமிழ் இயக்கம்-1, 1990
 2. என் தமிழ் இயக்கம்-2, 1992
 3. தாய்க்கொலை, 1992
 4. என் தமிழ் இயக்கம்-3, 1994
 5. என் தமிழ் இயக்கம்-4, 1996
 6. என் தமிழ் இயக்கம்-5, 1998
 7. எருமைத் தமிழர்கள், 1998
 8. இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?, 1999
 9. கழிசடைகள், 2002
 10. என் தமிழ் இயக்கம்-6, 2005
 11. என் தமிழ் இயக்கம்--7, 2006
 12. இலக்கிய எண்ணங்கள், 1998
 13. புகார் முத்தம், 1991
 14. கற்பு வழிபாடு, 1994
 15. கொஞ்சு தமிழ்ப்பெயர்கள், 2008

பாடல்[தொகு]

 1. ஓட்டைப் புல்லாங்குழல், 1990
 2. கம்பனுக்குப் பாட்டோலை, 1990
 3. பன்னீர்மழை, 1991
 4. அருளையா? பொருளையா?, 1999

இசை[தொகு]

 1. பாவேந்தரின் இசைத்தமிழ், 1990
 2. இசுலாம் வளர்த்த இசைத்தமிழ், 1996
 3. ஏழிசை எண்ணங்கள், 1998
 4. சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம், 2000
 5. அண்ணாமலையாரின் காவடிச்சிந்து, 2008

வரலாறு[தொகு]

 1. புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது, 1994
 2. பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003

மறைவு[தொகு]

முனைவர் இரா. திருமுருகனார் ஜூன் 3, 2009 அதிகாலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்[1].

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._திருமுருகன்&oldid=818987" இருந்து மீள்விக்கப்பட்டது