இரா. திருமன்
தோற்றம்
இரா. திருமன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | ஆர். காளியப்பன் |
| பின்னவர் | பி. ஆர். திருஞானம் |
| தொகுதி | ஏற்காடு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | கெளக்காடு, புங்கமடு, புழுதிக்குட்டை, பேளூர் |
| தொழில் | விவசாயி |
இரா. திருமன் (R. Thiruman) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பேளூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். பேளூர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]