இரா. சுவாமிநாதன்
தோற்றம்
இரா. சுவாமிநாதன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | என். எஸ். வி. சித்தன் |
| பின்னவர் | டி. கே. இராதாகிருஷ்ணன் |
| தொகுதி | திருமங்கலம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 மார்ச்சு 1944 வாளைக்குளம், திருமங்கலம் வட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| முன்னாள் மாணவர் | சென்னை சட்டக் கல்லூரி (இளநிலைச் சட்டம்) |
| தொழில் | வழக்கறிஞர் |
இரா. சுவாமிநாதன் (R. Saminathan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் வாளைக்குளம் கிராமத்தினைச் சேர்ந்தவர். மதுரை பசுமலையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலைச் சட்டப் படிப்பினை பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]