இரா. சாரங்கபாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரா. சாரங்கபாணி (செப்டம்பர் 18, 1925 - ஆகத்து 23, 2010) தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இரா.சாரங்கபாணியார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடி ஊரில் பொ. இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார் ஆகியோருக்குப் பிறந்தவர். தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று 1947 இல் புலவர் பட்டமும், 1949 இல் பி.ஓ.எல் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1955 இல் முதுகலைப் பட்டமும், 1962 இல் எம்.லிட் பட்டமும், 1969 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

சாரங்கபாணியாருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கா. சுப்பிரமணிய பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ. சிதம்பரநாதன் செட்டியார், ஆ. பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, வ. சுப. மாணிக்கம் ஆகியோராவர்.

தமிழ்ப் பணி[தொகு]

1949 இல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் செர்ந்தார். பின்னர் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் ஆனார். 1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார்.

விருதுகள்[தொகு]

 • இவர் எழுதிய பரிபாடல் திறன் (1975), மாணிக்கச்செம்மல் (1999) ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசில்களைப் பெற்றுள்ளன.
 • குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் பட்டம் (1981)
 • சீராம் நிறுவனத்தின் திருக்குறள் பொற்கிழி (1991)
 • தமிழ்நாடு அரசு விருது (1998)
 • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச்செம்மல் விருது (2000)

எழுதிய நூல்கள்[தொகு]

 • இயற்கை விருந்து (1962)
 • குறள் விருந்து (1968)
 • பரிபாடல் திறன் (1972)
 • A critical Study of Paripatal (1984)
 • A Critical Study of Ethical Literature in Tamil (1984)
 • சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இருதொகுதி) (1986)
 • திருக்குறள் உரை வேற்றுமை, அறத்துப்பால் (1989)
 • திருக்குறள் உரையாசிரியர்கள் (1991)
 • திருக்குறள் உரை வேற்றுமை, பொருட்பால் (1992)
 • திருக்குறள் உரை வேற்றுமை, காமத்துப்பால் (1992)
 • சங்கச் சான்றோர்கள் (1993)
 • வள்ளுவர் வகுத்த காமம் (1994)
 • புறநானூற்றுப் பிழிவு (1994)
 • மாணிக்கச் செம்மல் (1998)
 • திருக்குறள் இயல்புரை (1998)
 • சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் (1999)
 • திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம் (2000)
 • சங்கத்தமிழ் வளம் (2003)
 • பரிபாடல் உரைவிளக்கம் (2003), கோவிலூர் மடம்
 • சங்க இலக்கிய மேற்கோள்கள் (2008)
 • சங்க இலக்கியப்பிழிவு (2008)
 • திருக்குறள் செம்மொழிப்பதிப்பு (அச்சில்)
 • பரிபாடல் செம்மொழிப்பதிப்பு (அச்சில்)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சாரங்கபாணி&oldid=2613169" இருந்து மீள்விக்கப்பட்டது