இரா. சந்திரசேகரன்
தோற்றம்
இரா. சந்திரசேகரன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | கி. பொ. கோபால் |
| பின்னவர் | இரா. தி. கோபாலன் |
| தொகுதி | கம்பம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சூன் 1946 கூடலூர், தேனி மாவட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
இரா. சந்திரசேகரன் (R. Chandrasekharan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தேனி மாவட்டம் கூடலூ பகுதியினைச் சேர்ந்தவர். போடிநாயக்கனூர் விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரைக் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | இரா. சந்திரசேகரன் | 34,902 | 41.50% | ||
| திமுக | என். நடராஜன் | 34,080 | 40.52% | -7.39% | |
| காங்கிரசு | எசு. அப்துக் காதர் மரைக்காயர் | 11,329 | 13.47% | -35.40% | |
| ஜனதா கட்சி | சி. கே. ஜெயபிரகாசு | 2,856 | 3.40% | ||
| சுயேச்சை | எசு. என். பொன்னுசாமி | 477 | 0.57% | புதியவர் | |
| சுயேச்சை | கே. சுருளிவேலு | 465 | 0.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 822 | 0.98% | 0.02% | ||
| பதிவான வாக்குகள் | 84,109 | 67.75% | -8.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,25,579 | ||||
| காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -7.37% | |||