உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. சத்திக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. சத்திக்கண்ணன் (R. Sakthi kannan) சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். சிறுகதை,[1] புதுக்கவிதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபட்டுவரும் இவரின் முதல் படைப்பு ‘காலம் பொறந்திருச்சு’ எனும் தலைப்பில் ஞானோதய நாடக சபா புத்தகத்தில் வெளியானது. தோடர்ந்தும் எழுதிவரும் இவரது ஆக்கங்கள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு, புண்ணியா, திசை ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டம் 'பத்தை' எனும் கிராமத்தில் பிறந்த இவர் திருநெல்வேலி நீலகண்டா ஆரம்பப் பள்ளியிலும், சென்னை திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளியிலும் படித்துப் பின்பு சென்னை விவேகானந்தா கல்லூரியில் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வடை மாமா, கதை/கவிதை செய்திகள் - தமிழ் முரசு Literature News in Tamil, Tamil Murasu". Tamil Murasu. 2021-03-28. Retrieved 2025-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சத்திக்கண்ணன்&oldid=4201422" இலிருந்து மீள்விக்கப்பட்டது