இரா. காமராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா.காமராசு
பிறப்புஇரா.காமராசு
21 மார்ச் 1970 [1]
மேலவாசல், திருவாரூர் மாவட்டம் [2]
தொழில்தமிழ்ப் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர்
குடியுரிமைஇந்தியர்

இரா. காமராசு, தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலவாசல் என்னும் ஊரில் பிறந்தவர்.[3]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவருடைய பெற்றோர் இராமசாமி-அருமைக்கண்ணு. உயர்நிலைப்பள்ளி கல்வி வரை மேலவாசல் திருமுருகன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இளங்கலை, முதுகலை, கல்வியியல் பட்டப்படிப்புகளை சென்னைப் பல்கலைக்கழகத்திலும், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை பெரியார் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்ட ஆய்வினைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டுள்ளார். [2]1998இல் பள்ளி ஆசிரியராகப் பொறுப்பேற்ற இவர், தற்போது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் பணியாற்றிவிட்டு நாட்டுப்புறவியல்துறையில் துறைத்தலைவராகப் பணிபுரிந்து வருகின்றார்.[3]

பன்முகம்[தொகு]

நா. வானமாமலையின் ஆய்வுப் பங்களிப்பு குறித்த ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றவர். இவரது விருப்பமான ஆய்வுக்களமாக நவீன இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, இதழியல் போன்றவை அமையும்.[3] இவரது மேற்பார்வையில் சுமார் 70 ஆய்வியல் நிறைஞர் மாணவர்களும், 20 முனைவர் பட்ட ஆய்வுகளும் ஆய்வினை நிறைவு செய்துள்ளனர். [2]

நூல்கள்[தொகு]

இவர் கீழ்க்கண்டவை உள்ளிட்ட கவிதை நூல்கள், சிறுகதைத்தொகுப்புகள், ஆய்வு நூல்கள், பாட நூல்கள், திறனாய்வு நூல்கள், தொகுப்பு நூல்களையும், சில குறு நூல்களையும் எழுதியுள்ளார். சில நூல்களுக்குத் தொகுப்பாசிரியராகவும் உள்ளார்.

  1. கணவனான போதும் (1993)
  2. நா. வாவின் படைப்புகள் நூலடைவு (1999)
  3. மகளுக்குச் சொல்ல (2000)
  4. பால்யசிநேகிதன் – தாமரைச் சிறுகதைகள் (2001)
  5. நூல் முகங்கள் (2002)
  6. ஙப்போல் வளை (2003)
  7. பதிவும் பார்வையும் (2007)
  8. குழந்தைகளைக் கொண்டாடுவோம் (2007)
  9. தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத்தடம் (2008)
  10. தமிழக வரலாறும் பண்பாடும் (2009)
  11. வேங்கை – ஆய்வுக் கட்டுரைகள் (2009)
  12. தமிழ் ஆளுமைகள் சிந்தனைத்தடம் (2010)
  13. நவீன இலக்கியம் அடையாளம் அழகியல் (2010)
  14. நா. வானமாமலை நூல் தொகுப்பு – இக்கால இலக்கியம் (2010)
  15. நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம் (2011) [4]
  16. இந்திய இலக்கியச் சிற்பிகள் – சு. சமுத்திரம் (2012) [5]
  17. குழந்தையும் கல்வியும் (2012)
  18. விளிம்பு நிலை வாழ்வியல் (2012)
  19. நா.வா. வாழ்வும் பணியும் (2012)
  20. அறிஞர் அண்ணாவின் கவிதைகள் (2013)
  21. விடுதலைக்குப் பின் கட்டுரை இலக்கியம் (2013)
  22. தமிழில் மாற்று ஆய்விதழ்கள் (2014)
  23. படுவழிப் படுக (2014)
  24. கட்டற்ற கவிதை அத்துமீறும் பயணம் (2014)
  25. தமிழ்த் தூதர் தனிநாயகம் (2014)
  26. தமிழ்ச் சிற்றிதழ்கள் வழி உருவான நவீனத் திறனாய்வுப் போக்குகள் (2016)
  27. இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள் (2016)
  28. தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும் (2016) [6]
  29. இந்திய இலக்கியச் சிற்பிகள் – தனுஷ்கோடி ராமசாமி (2016)
  30. கால்டுவெல்லின் தமிழ்க்கொடை (2016)
  31. நாவல் இலக்கியப் போக்குகள் (2016)
  32. உரைநடைப் பூங்கா (2016)
  33. தனிநாயகம் அடிகளின் தமிழியல் பங்களிப்பு (2017)
  34. பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் பன்முகம் (2017)
  35. கடித இலக்கியம் (2017) [7]
  36. சிறுவர் கதைக் களஞ்சியம் (சொ. சேதுபதி உடன் இணைந்து) (2017)
  37. பெண் எழுத்து வலியும் ஒளியும் (2018)
  38. தமிழ் இலக்கிய நவீனத் திறனாய்வுக் கோட்பாடுகள் (2018)
  39. தமிழ்ச் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் தமிழியல் பங்களிப்பு (2019)
  40. நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள் (2021) [8]

விருதுகளும் பொறுப்புகளும்[தொகு]

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் பல பொறுப்புகளை வகித்து வருகிறார்.[3]

பரிசுகள்/விருதுகள்[தொகு]

  1. பாரத ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசு (2001)
  2. திருப்பூர் தமிழ்ச் சங்க இலக்கியப் பரிசு (2004)
  3. எட்டையபுரம் பாரதி விழா பரிசு (2004)
  4. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஆய்வுநூல் பரிசு (2008)
  5. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வு நூலுக்கானப் பரிசு (2009)
  6. என். சி. பி. ஹெச் ஆய்வு நூல் பரிசு (2011)
  7. நெய்வேலி புத்தகக் கண்காட்சி – சிறந்த எழுத்தாளர் விருது
  8. ஜேசீஸ் – செம்மைப்பணி விருது (2013)

பொறுப்புகள்[தொகு]

  1. தேசியக்குழு உறுப்பினர், சாகித்திய அகாதமி, புதுதில்லி (2013 - 2017).
  2. பாடத்திட்டக்குழு உறுப்பினர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
  3. பாடத்திட்டக்குழு உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
  4. பாடத்திட்டக்குழு உறுப்பினர், ஜமால் முகமது கல்லூரி, திருச்சி.
  5. பாடத்திட்டக்குழு உறுப்பினர், நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி.
  6. பாடத்திட்டக்குழு உறுப்பினர், பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி, கோவை.
  7. பாடத்திட்டக்குழு உறுப்பினர், காவேரி கல்லூரி, திருச்சி.
  8. ஆசிரியர் குழு உறுப்பினர், தாமரை இலக்கிய இதழ்.
  9. ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ்க்கலை ஆய்விதழ்.
  10. ஆசிரியர் குழு உறுப்பினர், நா. வா. வின் ஆராய்ச்சி ஆய்விதழ்.
  11. பதிப்பாசிரியர் குழு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை
  12. ஆசிரியர் குழு உறுப்பினர், சாண்லாக்ஸ் ஆய்விதழ்

அயலகப்பயணம்[தொகு]

மலேசியா, மொரீசியஸ், பிரான்ஸ், ஜெர்மனி, மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, தமிழ் மொழிக் கற்பித்தல் பயிற்சியினை அளித்துள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா.காமராசு, இந்திய இலக்கியச் சிற்பிகள் தி.க.சிவசங்கரன்,சாகித்திய அகாதெமி நூலின் பின்னட்டை
  2. 2.0 2.1 2.2 2.3 அ.அனுசுயா, கவிஞர் இரா. காமராசுவின் படைப்புலகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, டிசம்பர் 2019
  3. 3.0 3.1 3.2 3.3 தமிழ்ப்பல்கலைக்கழகம், இணையதளம்
  4. பிரபஞ்சன், எமது உள்ளம் சுடர் விடுக! 20-ஓர் ஏர் உழவன், இந்து தமிழ் திசை, 13 டிசம்பர் 2017
  5. தமிழ்ப் பேராழியில் கலந்த சமுத்திரம், உங்கள் நூலகம், கீற்று, 27 ஆகஸ்டு 2013
  6. நூல் அரங்கம், தினமணி, 14 நவம்பர் 2016
  7. நூல் அரங்கம், தினமணி, 6 ஆகஸ்டு 2018
  8. நூல் அரங்கம், தினமணி, 27 டிசம்பர் 2021

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._காமராசு&oldid=3707392" இலிருந்து மீள்விக்கப்பட்டது