உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. கனகரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்
பிறப்புஇராமசாமி கனகரத்தினம்
(1934-08-01)1 ஆகத்து 1934
குரும்பசிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு22 சூன் 2016(2016-06-22) (அகவை 81)
முல்கம்பலை, கண்டி, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஆவணக் காப்பாளர்
வாழ்க்கைத்
துணை
பவளராணி கனகரத்தினம்

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இரா கனகத்தினம் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டம் குரும்பசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். கண்டி மாவட்டம், முல்கம்பலை என்ற ஊரில் வாழ்ந்து வந்தவர்.

ஆவணக் காப்பகம்

[தொகு]

இரா. கனகரத்தினம் 1956 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தார்.[2] இவர் ஆவணங்களைக் ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ் ஆவணக் காப்பகம் என்ற அமைப்பை கண்டியில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி யுனெஸ்கோவின் ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர்களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை நோர்வே அரசின் உதவியுடன் 200 இற்கும் அதிகமான நுண்ணிழைப்படங்களில் பதிவு செய்து வைத்துள்ளார்.[3]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.[3]

சாலை இளந்திரையன் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். கனடாத் தமிழர் இவருக்கு ஆவணஞானி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.[3]

மறைவு

[தொகு]

இரா. கனகரத்தினம் 2016 சூன் 22 புதன்கிழமை தனது 81-வது அகவையில் கண்டியில் காலமானார். இவருக்கு பவளராணி என்ற மனைவியும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.[4]

எழுதிய நூல்கள்

[தொகு]
தளத்தில்
இரா. கனகரத்தினம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • சிறுகதை (“சீசரின் தியாகம்" 1952)
  • 2500,000 மக்கள் தலைவர் (தந்தை செல்வா பற்றிய தொகுப்பு நூல், 1960)[5]
  • அலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973),
  • உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி (1974)
  • இறி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979)
  • மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980)
  • உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்
  • உலகத் தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும் (1981)
  • ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு
  • ஒரு குடையின்கீழ் உலகத்தமிழினம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. கோப்பாய் சிவம் (1985). "இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்". பார்க்கப்பட்ட நாள் 11 மே 2014.
  2. ந.பார்த்திபன். "ஆவணஞானி, நடமாடும் தமிழியக்கம் இரா.கனகரத்தினம்". ஞானம் 2000.07. Archived from the original on 2018-05-30. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2016.
  3. 3.0 3.1 3.2 பேராசிரியர் சோ. சந்திரசேகரன். "தமிழர் வரலாற்று ஆவணக் களஞ்சியம் ஈழத் தமிழர் இரா. கனகரத்தினம் அரிய தொண்டு". பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
  4. "Veteran Eezham Tamil archivist passes away at 81". தமிழ்நெட். 23 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2016.
  5. "நூல் நயம்". தென்றல் (சென்னை). மார்ச் 26, 1960. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கனகரத்தினம்&oldid=3644604" இலிருந்து மீள்விக்கப்பட்டது