இரா. ஆவுடையப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரா. ஆவுடையப்பன் (R. Avudaiyappan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆவார். சென்னை சட்டக் கல்லூரியில் இவர் சட்டம் பயின்று இளநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் 1996 மற்றும் 2006 தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

2011ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலிலும் இவர் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும், இவர் அஇஅதிமுக வேட்பாளர் ஈ. சுப்பையாவிடம் (அதிமுக) தோல்வியடைந்தார். 2016[3] மற்றும் 2021[4] சட்டமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 2006 முதல் 2011 வரை தமிழக மாநிலச் சட்டசபையின் சபாநாயகராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._ஆவுடையப்பன்&oldid=3262280" இருந்து மீள்விக்கப்பட்டது