இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி
राष्ट्रिय स्वतन्त्र पार्टी
சுருக்கக்குறிRSP (रा.स्व.पा)
தலைவர்ரபி லமிச்சேன்
பொதுச் செயலாளர்முகுல் தாகல்
Spokespersonமுகுல் தாகல்
துணைத் தலைவர்டோல் பிரசாத் ஆர்யல்
குறிக்கோளுரைअब जान्नेलाई छान्ने
தலைமையகம்காட்மாண்டு
கொள்கைசமூக விடுதலை
முன்னேற்றம்
ஜனரஞ்சகவாதம்
அரசியல் நிலைப்பாடுஅனைவருக்குமான கட்சி
நிறங்கள்    
நிலைதேசியக் கட்சி (4வது பெரிய கட்சி)
நேபாள பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர்கள்
20 / 275
தேர்தல் சின்னம்
இணையதளம்
rspnepal.org

நடு-இடதுசாரி அரசியல் மற்றும் நடு-வலதுசாரி அரசியல் [1]

இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி (Rastriya Swatantra Party (நேபாளி: राष्ट्रिय स्वतन्त्र पार्टी; abbr. RSP) (மொ.பெ. National Independent Party; abbr. NIP) நேபாளத்தின் நான்காவது பெரிய தேசிய அரசியல் கட்சியாகும். இக்கட்சி 26 டிசம்பர் 2022 முதல் 5 பிப்ரவரி 2023 வரை பிரசந்தா அமைச்சரவையில் அங்கம் வகித்தது.[2] பின்னர் பிரசந்தாவின் கூட்டணி அரசுக்கு தனது ஆதரவை விலக்கியது.[3]

1 சூலை 2022 அன்று ரபி லமிச்சேன் தலைமையில் நிறுவப்பட்ட இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது. [4][5] இதன் சின்னம் மணி ஆகும்.[6] 2022 நேபாள பொதுத் தேர்தலில் இக்கட்சியின் சார்பில் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 19 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]