உள்ளடக்கத்துக்குச் செல்

இராவ் கோபால் இராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராவ் கோபால் இராவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
3 ஏப்ரல் 1986 முதல் 2 ஏப்ரல் 1992 வரை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-01-14)14 சனவரி 1937
காக்கிநாடா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு13 ஆகத்து 1994(1994-08-13) (அகவை 57)
ஐதராபாத்து
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்கமலா குமாரி
பிள்ளைகள்3

இராவ் கோபால் இராவ் (Rao Gopal Rao) (14 சனவரி 1937 - 13 ஆகத்து 1994) ஒரு இந்திய நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர்,தெலுங்குத் திரைப்படத்துறையிலும், தெலுங்கு நாடகங்களிலும் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[1] நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரு திரைப்பட வாழ்க்கையில், நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர், நகைச்சுவை வேடங்களுடன் முன்னணி எதிரி கதாபாத்திரங்களின் கொடூரமான சித்தரிப்புகளுக்கு அறியப்பட்டார்.[2] 1990ஆம் ஆண்டில் ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு "கலா பிரபூர்ணா" என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் 1987ஆம் ஆண்டில் "நாதவிராத்", "சித்தூரு நாகையா விருது" போன்றவையும் வழங்கப்பட்டது.[3][4]

திரைப்படங்கள்[தொகு]

முத்யாலா முக்கு (1975), பக்த கண்ணப்பா (1976), கோரண்ட தீபம் (1978), மனவூரி பாண்டவுலு (1978), கலியுக ராவணாசுருடு (1980), தியாகய்யா (1981), ஊரிகி மோனகாடு (1981), குடாச்சாரி நெ. 1 (1983) 1983), கைதி (1983), சேலஞ் (1984), ஜாக்கி (1985), புல்லட் (1985), அத்தகு யமுடு அம்மாய்கி மொகுடு (1989), லாரி டிரைவர் (1990), கொண்டவீதி தொங்கா (1990), கேங்க் லீடர் (1991) போன்ற படைப்புகளில் எதிமறை பாத்திரங்களில் நடித்ததற்காக அறியப்பட்டார் [5]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இராவ் கோபால் இராவ் 1937 இல் இந்தியாவின் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கங்கனபள்ளியில் பிறந்தார். இவர் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் மேடையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் பல நாடகங்களிலும் நடித்தார். எஸ். வி. ரங்கராவ் இவரது நாடகங்களைப் பார்த்து பக்த பொட்டானா (1966) என்ற படத்தின் இயக்குநர் குட்டா இராமிநீதுவுக்கு பரிந்துரை செய்தார்.[6] இவர், இந்த படத்திற்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். பங்காரு சங்கெல்லு, மூகா பிரேமா உள்ளிட்ட பிற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.[5]

அரசியல்[தொகு]

1984-85ல் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும், அப்போதைய ஆந்திராவின் முதல்வராக இருந்த என். டி. ராமராவால் நியமிக்கப்பட்டார். இவர் ஏப்ரல் 3, 1986 முதல் 1992 ஏப்ரல் 2 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார் [7]

இறப்பு[தொகு]

இவர் 1994 ஆகத்து 13 அன்று தனது 57 வயதில் இறந்தார். பிரேமா & கோ என்றத் திரைப்படம் இவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது. இவரது மகன் ராவ் ரமேஷ் தெலுங்கு திரைப்பட நடிகராக இருக்கிறார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Drama competition from Oct. 9". 28 September 2015 – via www.thehindu.com.
  2. Tfn, Team. "Rao Gopal Rao". Telugu Filmnagar. Archived from the original on 2020-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
  3. kavirayani, suresh (8 April 2018). "Rao Gopala Rao's wife passes away!". Deccan Chronicle.
  4. "Tollywood Movie Actor Rao Gopal Rao Biography, News, Photos, Videos". nettv4u.
  5. 5.0 5.1 Tfn, Team. "Rao Gopal Rao". Telugu Filmnagar. Archived from the original on 2020-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.Tfn, Team. "Rao Gopal Rao" பரணிடப்பட்டது 2020-10-25 at the வந்தவழி இயந்திரம். Telugu Filmnagar.
  6. "Harish Shankar brings back Rao Gopal Rao's look in Duvvada Jagannadham". in.style.yahoo.com.
  7. "Profile of Former Rajya Sabha members" (PDF). Archived from the original (PDF) on 2013-10-31. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
  8. kavirayani, suresh (2017-06-17). "Rao Ramesh lives up to his father's name". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவ்_கோபால்_இராவ்&oldid=3926533" இலிருந்து மீள்விக்கப்பட்டது