இராவோர்செசுடெசு சிக்னாடசு
| இராவோர்செசுடெசு சிக்னாடசு | |
|---|---|
| இதன் மேற்புறத்தோற்றமும் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| வேறு பெயர்கள் | |
|
Ixalus signatus Boulenger, 1882 | |
இராவோர்செசுடெசு சிக்னாடசு (Raorchestes signatus) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும். விலங்கியல் வகைப்பாட்டியல்படி, இந்த இனத்தின் தவளை, இராகோபோரிடே என்ற குடும்பத்தின் கீழுள்ள, இராவோர்செசுடெசு என்ற பேரினத்தில் அமைந்துள்ளது. மரங்களில் வாழும் இந்தத் தவளை, மலைப்பகுதி பசுமைமாறாக் காடுகள், சோலைக் காடுகள், மேலும், ஆங்காங்கே அமைந்துள்ள காடுகளிலும், அவ்வப்போது நகரங்கள், புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்களிலும் காணப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 2465 மீட்டர் வரையிலான உயரத்தில் இத்தவளை காணப்பட்டுள்ளது. கைட்ரிடியோமைகோசிஸ் எனும் பூஞ்சை நோய், இந்தத் தவளையைப் பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.[1] காலநிலை மாற்றம், தைலம் (மரம்) வளர்ச்சி, நிலத்தடி நீர்மட்டம் ஆகிய காரணிகளால், இதன் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 IUCN SSC Amphibian Specialist Group (2023). "Cross-backed Bush Frog: Raorchestes signatus". The IUCN Red List of Threatened Species. 3.1. p. e.T58903A166107945. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T58903A166107945.en. 58903. Retrieved April 23, 2024.
