இராயப்பேட்டை மணிக்கூண்டு, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயப்பேட்டை மணிக்கூண்டு கோபுரம்
ஒரு நகரப் பேருந்து மணிக்கூண்டைக் கடந்து செல்லும் காட்சி
இடம்வெஸ்ட் காட் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014
வகைஆர்ட் டெக்கோ
கட்டுமானப் பொருள்கான்கிரீட்
முடிவுற்ற நாள்1930 ஆம் ஆண்டுகளில்

இராயப்பேட்டை மணிக்கூண்டு,சென்னை என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள இராயப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு தனித்த கடிகார கோபுரம் ஆகும். இது நகரத்தில் உள்ள நான்கு தனித்த கடிகார கோபுரங்களில் ஒன்றாகும். மற்ற மூன்று மின்ட், டோவெட்டன் மற்றும் புளியந்தோப்பில் உள்ளன.

வரலாறு[தொகு]

கடிகார கோபுரங்கள் வருவதற்கு முன்பு, புனித ஜார்ஜ் கோட்டையில், அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் இரவு 8:00 மணிக்கு பீரங்கி குண்டுகளை சுடுவார்கள்.[1] 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்த இந்த நடைமுறை, 1900 களின் முற்பகுதியில் புரசைவாக்கம் டோவெட்டன் சந்திப்பில் முதல் தனித்த கடிகார கோபுரம் கட்டப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டது.[1] இதைத் தொடர்ந்து, ஜார்ஜ் டவுன், இராயப்பேட்டை, புளியந்தோப்பில் உள்ள மின்ட் சந்திப்பு ஆகிய இடங்களில் இதேபோன்ற கடிகார கோபுரங்கள் கட்டப்பட்டன.

இராயப்பேட்டை மணிக்கூண்டு 1930 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. இராயப்பேட்டை கடிகாரக் கோபுரத்திற்கான கடிகாரக் கருவியானது கனி அண்ட் சன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இநிறுவனம் முதலில் தென்னிந்திய கடிகார நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. இது ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த ஹாஜி மிர்சா அப்துல் கனி நமாசியால் 1909 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் மின்ட், சூளை மற்றும் திருவொற்றியூரில் உள்ள மற்ற சுயாதீன கடிகார கோபுரங்களுக்கும் கடிகாரங்களை வழங்கியது.[2]

இடம்[தொகு]

2023-ல் இராயப்பேட்டை மணிக்கூண்டின் தோற்றம்

இராயப்பேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட்காட் சாலை, ஒயிட்ஸ் சாலை, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை மற்றும் பைக்ராஃப்ட்ஸ் சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் சந்திப்பில் அமைந்துள்ளது.

மணிக்கூண்டு[தொகு]

கடிகார கோபுரம் கிளாசிக் ஆர்ட் டெகோ கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது. நகரத்தின் எடுத்துக்காட்டத்தக்க பாணியாக இந்த மணிக்கூண்டு திகழ்கிறது.

ஏப்ரல் 2021 இல், மணிக்கூண்டு இராயப்பேட்டை ரோட்டரி கிளப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Madhavan, D. (19 January 2014). "Clock tower at Mint ticks again". The Hindu (Chennai). http://www.thehindu.com/news/cities/chennai/clock-tower-at-mint-ticks-again/article5591037.ece. பார்த்த நாள்: 24 March 2014. 
  2. Venkatraman, Janane (27 August 2012). "It's time to look at our city's landmarks again". The New Indian Express (Chennai: Express Publications). http://www.newindianexpress.com/cities/chennai/article596235.ece?service=print. பார்த்த நாள்: 24 March 2014. 
  3. "Rotary Club of Royapettah adopts Tower Clock". The Hindu. 17 April 2021. https://www.thehindu.com/news/cities/chennai/rotary-club-of-royapettah-adopts-tower-clock/article34343391.ece. 

நூல் பட்டியல்[தொகு]

  • S. Muthiah (1981). Madras Discovered. East West Books (Madras) Pvt Ltd.   

மேலும் படிக்க[தொகு]