உள்ளடக்கத்துக்குச் செல்

இராயப்பு யோசேப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராயப்பு யோசப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அதி வணக்கத்துக்குரிய
இராயப்பு யோசப்பு
மன்னார் ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்மன்னார்
ஆட்சி துவக்கம்சூலை 6, 1992
ஆட்சி முடிவுசனவரி 14, 2016
முன்னிருந்தவர்தோமசு சௌந்தரநாயகம்
பின்வந்தவர்கிங்ஸ்லி சுவாம்பிள்ளை (பரிபாலகர்)
பிற தகவல்கள்
பிறப்பு(1940-04-16)ஏப்ரல் 16, 1940
நெடுந்தீவு, இலங்கை
இறப்புஏப்ரல் 1, 2021(2021-04-01) (அகவை 80)
யாழ்ப்பாணம், இலங்கை
குடியுரிமைஇலங்கைத் தமிழர்
இல்லம்மன்னார்
படித்த இடம்பரப்புரைக் கல்லூரி, உரோம்

வண இராயப்பு யோசப்பு (Rayappu Joseph, 16 ஏப்ரல் 1940[1] - 1 ஏப்ரல் 2021) இலங்கையின் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரும் ஆவார்.[2][3][4][5]

இராயப்பு ஜோசப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[6][7] இவரது தந்தை ஒரு சுதேச வைத்தியர். தனது ஆரம்பக் கல்வியை நெடுந்தீவிலும் முருங்கனிலும் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் பயின்றார். உயர்கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் பயின்றார்.[8][9] யாழ்ப்பாணத்தில் தேசிய செமினறியில் இணைந்து சமயக் கல்வியைத் தொடர்ந்தார். 27வது அகவையில் குரு பட்டமும் பெற்றார். யோசப்பு திருச்சபைச் சட்டத்தில் முனைவர் பட்டத்தை உர்பானியானா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[7]

1967 இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்தவர் 1971 இல் முருங்கன் உதவி பாதிரியாராக (pastor) ஆனார். 1984 ஆம் ஆண்டில் ரோமில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறைச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1992 சூலையில் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 அக்டோபரில் திருநிலைப்படுத்தப்பார்.[6][7] 2015 நடுப்பகுதியில் சுகவீனமுற்ற இராயப்பு தனது ஆயர் பதவியைத் துறந்தார். இவரது பதவித் துறப்பை திருச்சபை சட்ட எண் 401 பகுதி 1க்கு அமைவாக, திருத்தந்தை பிரான்சிசு 2016 சனவரி 14 இல் ஏற்றுக் கொண்டார். மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்படும் வரை திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போத்தலிக்க பரிபாலகராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.[5][10]

இராயப்பு யோசப்பு ஈழப்போரின் போது இலங்கை அரசு, மற்றும் இலங்கைப் படையினரின் பங்களிப்புக் குறித்தும், நாட்டின் மனித உரிமை மீறல் குறித்தும் பெரிதும் விமரிசனம் செய்து வந்தார்.[11][12] இதன் மூலம் அவருக்கு அரச ஆதரவாளர்களின் அசுறுத்தல்களை எதிர்நோக்கவேண்டி வேண்டியிருந்தது.[13]

விருதுகள்[தொகு]

மறைவு[தொகு]

வண. இராயப்பு யோசேப்பு சுகவீனமுற்ற நிலையில் 2021 ஏப்ரல் 1 காலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 80-வது அகவையில் காலமானார்.[14]

மேற்கோள்கள்[தொகு]

 1. Bishop Rayappu Joseph - - Catholic Hierarchy
 2. "Mannar Bisphop". Archived from the original on 2013-11-26. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.
 3. Sri Lanka row over Catholic letter on human rights-BBC
 4. Sri Lanka's war panel arouses strong emotions-BBC
 5. 5.0 5.1 "Resignation accepted of Bp. Rayappu and new Apostolic Administrator of Mannar appointed". வத்திக்கான் வானொலி. 14 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2016.
 6. 6.0 6.1 "Bishop Rayappu Joseph". Catholic Hierarchy.
 7. 7.0 7.1 7.2 "BBishop Joseph". Union of Catholic Asian News இம் மூலத்தில் இருந்து 2015-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151212052343/http://directory.ucanews.com/bishops/bishop-joseph/562. 
 8. "Past Bishops". St Patrick's College, Jaffna Old Boys' Association, Colombo Branch. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2016-01-15.
 9. Rasaiya, Christy (16 சூலை 2000). "St. Patrick's 150 years old". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/000716/plus12.html. 
 10. "Bishop Rayappu Joseph resigns; New Apostolic Administrator appointed by Pope". சண்டே டைம்சு. 14 சனவரி 2016. Archived from the original on 2016-01-15. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2016.
 11. "Sri Lanka's war panel arouses strong emotions". பிபிசி. 11 சனவரி 2011. http://www.bbc.co.uk/news/world-south-asia-12154294. 
 12. "Sri Lanka row over Catholic letter on human rights". பிபிசி. 6 மார்ச் 2012. http://www.bbc.co.uk/news/world-asia-17268307. 
 13. ஜெயராஜ், டி. பி. எஸ். (2 சூன் 2012). "Pope Benedict to express concern over Mannar Bishop Rayappu Joseph's safety to President Rajapaksa at Vatican". dbsjeyaraj.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-15.
 14. "Bishop Emeritus of Mannar Rayappu Joseph passes away". Colombo Page. 1 ஏப்ரல் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயப்பு_யோசேப்பு&oldid=3705801" இலிருந்து மீள்விக்கப்பட்டது