உள்ளடக்கத்துக்குச் செல்

இராயசம் சேசகிரி ராவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயசம் சேசகிரி ராவு
Rayasam Seshagiri Rao
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1952-1957
பின்னவர்பெந்தேகண்டி வெங்கடசுப்பையா
தொகுதிநந்தியாலா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13, சூலை 1909
இறப்புமே 30, 1963(1963-05-30) (அகவை 53)
துணைவர்ஆர். கமலம்மா
கல்விஇளங்கலை, இளங்கலைச் சட்டம்
மூலம்: [1]

இராயசம் சேசகிரி ராவு (Rayasam Seshagiri Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1909 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் நகரத்தில் இவர் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். கமலம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவின் 1ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இராயசம் சேசகிரி ராவு ஒரு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். நில அடமான வங்கியின் ஆலோசகராகவும், இராயலசீமா மகா சபையின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இவர் ஒரு கவிஞரும் ஆவார். சாகித்ய பரிசத்து அமைப்பு இவருக்கு கவி சேகரம் என்ற பட்டத்தை வழங்கியது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Members Bioprofile from Indian Parliament.
  2. Rayasam, Seshagiri Rao (1933). Krotta Namoona (in Telugu). Nandyala: Nandyala Amateurs. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயசம்_சேசகிரி_ராவு&oldid=3834492" இலிருந்து மீள்விக்கப்பட்டது