இராம. வீரசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராம. வீரசிங்கம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தற்போது பிரித்தானியக் குடிமகனாகி லண்டனில் வசித்து வருகிறார். பாரி எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் முதியோர் கல்வி முன்னேற்ற திட்ட மேலாளர். தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் தீவிர ஈடுபாட்டுள்ள இவர் இங்கிலாந்தில் "வீர வள்ளுவம்" மற்றும் "லண்டன் தமிழ் மரபு ஆராய்ச்சி" எனும் நிறுவனங்களை அமைத்ததுடன், லண்டன் தமிழ்ச் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். அதேநேரம், ஆலய நிர்வாகங்களிலும் பங்காற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1957 தொடக்கம் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசிய தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரித்தானிய இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "பாரியின் சிறுகதைகள்" (1982)
  • "சத்து ரிங்கிட்" (சிறுகதைகள், 1982)
  • "பாச அலைகள்" (சிறுகதைகள், 1982)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • USIS நூலகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு (1957)
  • தமிழ் நேசன் நடத்திய கிராம வளர்ச்சி கட்டுரைப் போட்டியில் பரிசு (1960)
  • தமிழ் நேசன் தங்கப் பதக்கம் (1972)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம._வீரசிங்கம்&oldid=3234497" இலிருந்து மீள்விக்கப்பட்டது