உள்ளடக்கத்துக்குச் செல்

இராம. கனகசுப்புரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம. கனகசுப்புரத்தினம்
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர், ஆசிரியர், சொற்பொழிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்போது
சமயம்இந்து
பெற்றோர்பெ. இராமையா
பிள்ளைகள்2
வலைத்தளம்
[1]

இராம. கனகசுப்புரத்தினம், பதினாறு கவனகர் திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம் என அறியப்படும் இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர், சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார்.[1][2] இவர் மெகா தொலைக்காட்சியில் தினமும் வெற்றி நிச்சயம் என்ற சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார்.[3]

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

இவரது தந்தை திருக்குறள் பெ. இராமையா தசாவதானியாகத் திகழ்ந்து 'தமிழக அரசவைக் கலைஞராக' இருந்தவர்.

இவர் 1330 குறளில் எதை கேட்டாலும் , அதன் வரிசை எண் எந்த அதிகாரம் மற்றும் அந்த குறளையும் சொல்வதோடு தலைகீழாகவும் குறளை சொல்வதில் வல்லவர்.[4]

நினைவாற்றலை வளர்க்க பயிலரங்கம் நடத்தி வருகின்றார். இவர் தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகின்றார்.

பதினாறு கவனக நிகழ்ச்சிகள்

[தொகு]

கவனகர் இராம. கனகசுப்புரத்தினம் நிகழ்த்தும் பதினாறு கவனக நிகழ்ச்சிகள்

  1. குறள் கவனகம்
  2. எண் கவனகம்
  3. எழுத்துக் கவனகம்
  4. பெயர்க் கவனகம்
  5. வெண்பா இயற்றும் கவனகம்
  6. இராகங்களில் கவனகம்
  7. மாயக்கட்டம் நிரப்புதல்
  8. கூட்டல் கவனகம்
  9. பெருக்கல் கவனகம்
  10. 100ஐ முடிக்கும் கவனகம்
  11. வண்ணக் கவனகம்
  12. தொடுவுணர்வு கவனகம்
  13. மணியோசை (கேட்டல்) கவனகம்
  14. லாடசங்கிலி பூட்டி, கழற்றுதல்
  15. பிறந்த கிழமை கூறுதல் (பிறந்த நாள் கூற)
  16. திருக்குறளில் பலவிதமான கேள்விகள்.

நூல்கள்

[தொகு]
  • மனம் ஒரு கணினி
  • கேட்டதும் கிடைத்ததும்
  • திருக்குறள் உணர்வுரை
  • முன்னேற விரும்புவோர்க்கு
  • வானமே நம் எல்லை
  • எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எப்படி?
  • சான் அருளிய அற்புத நெறிகள்
  • இளைஞர்களுக்கு
  • நாம்தான் கடவுள் எப்போது.
  • சிற்றின்பம் பேரின்பம்
  • கடவுளைக் கண்டோம்.
  • நினைவாற்றல் வளர
  • விநோதமான வினாக்கள்

இவற்றையும் காண்க

[தொகு]

கவனகம்

மேற்கோள்கள்

[தொகு]

வெளிஇணைப்புகள்

[தொகு]

https://youtube.com/c/KAVANAGARKARJANAI

https://kavanagarkarjanai.com/products/

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம._கனகசுப்புரத்தினம்&oldid=4022227" இலிருந்து மீள்விக்கப்பட்டது