இராம் ஷா (மன்னன்)
இராம் ஷா | |
---|---|
இராஜா | |
50வது நாகவன்ஷி அரசன் | |
ஆட்சிக்காலம் | பொ.ச. 1640 முதல் 1665 வரை |
முன்னையவர் | துர்ஜன் சால் |
பின்னையவர் | இரகுநாத் ஷா |
துணைவர் | முக்தா தேவி |
குழந்தைகளின் பெயர்கள் |
|
அரசமரபு | நாகவன்ஷி |
தந்தை | துர்ஜன் சால் |
மதம் | இந்து சமயம் |
இராம் ஷா (Ram Shah ) 17 ஆம் நூற்றாண்டில் சோட்டா நாக்பூரிலிருந்த ஓர் நாகவன்ஷி மன்னராவார். இவரது தலைநகரம் நவரத்தன்கரில் இருந்தது. இவர் துர்ஜன் சாலுக்குப் பின் பதவியேற்று பொ.ச. 1640 முதல் 1665 வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பிறகு இவரது மூத்த மகன் இரகுநாத் ஷா ஆட்சிக்கு வந்தார். [1]
இவரது ஆட்சிக் காலத்தில், "நாகேஸ்வர்" என்ற மன்னர் இப்பகுதியில் படையெடுத்தார். இவர் ரேவா மன்னருக்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டார். இறுதியில் ஒப்பந்தம் ஏற்பட்டு போர் நிறுத்தப்பட்டது. இவரது மகன் அனி நாத் சகாதேவ், ரேவா மன்னரின் மகளை மணந்தார்.
இவரது ஆட்சிக் காலத்தில், சிங்பூம் பகுதியை ஆண்டுவந்த ஜெகந்நாத் என்பவர் நாகவன்ஷி மன்னர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தினார். இவர் அவருக்கெதிராக போரிட்டார். சுமார் 2200 பேர் போரில் இறந்தனர். இறுதியில் ஜெகந்நாத் இவருடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nagbanshis And The Cheros". archive.org.