இராம் சுவரூப் கசானா
தோற்றம்
இராம் சுவரூப் கசானா | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை | |
| பதவியில் 2008–2013 | |
| முன்னையவர் | சுபாஷ் சந்திரா |
| தொகுதி | கோட்பூத்லி (இராசத்தான் சட்டமன்றத் தொகுதி) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | செய்ப்பூர் |
| அரசியல் கட்சி | இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி |
| துணைவர் | ஹேம்லதா கசானா |
| வாழிடம் | கோட்பூத்லி, இராசத்தான் |
| தொழில் | அரசியல்வாதி, விவசாயம் |
| உடைமைத்திரட்டு | முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோட்பூத்லி (இராசத்தான்) |
இராம் சுவரூப் கசானா (Ramswaroop Kasana) இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2008 முதல் 2013 வரை இராசத்தான் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் 22328 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் இராஜேந்திர சிங் 21435 வாக்குகள் பெற்றிருந்தார். இவர்களுக்கிடையேயான வாக்கு வித்தியாசம் 823 ஆகும்.[3] மேலும், இவர் இராசத்தான் அரசின் பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramswaroop(Rashtriya Loktantrik Party):Constituency- KOTPUTLI(JAIPUR) - Affidavit Information of Candidate:".
- ↑ "राजस्थान: 14 फ़ीसदी वोट भी बना देते हैं विधायक". 2013-11-26.
- ↑ "RAMSWAROOP KASANA". election tak. Retrieved 3 November 2023.
- ↑ "Parliamentary secretaries sworn in". 2011-11-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/parliamentary-secretaries-sworn-in/articleshow/10775408.cms?from=mdr.