உள்ளடக்கத்துக்குச் செல்

இராம்ராஜ் காட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராம்ராஜ் காட்டன் (Ramraj Cotton) என்பது ஓர் இந்திய பாரம்பரிய ஆடை வணிகக்குறி ஆகும். இது கே. ஆர். நாகராஜனின் முயற்சியினால் உருவானது. இராம்ராஜ் நிறுவனம் ஆடைத் தொழிலில் காலடி எடுத்து வைத்து, குறிப்பாக பருத்தியில் நெய்யப்பட்ட வெள்ளை வேட்டி, சட்டைகளை விற்பனை செய்தது. இராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆடைத் துறையில் கணிசமான சந்தையைப் பிடித்துள்ளது மேலும் பாரம்பரிய ஆடைத் துறை சந்தையில் உச்சம்பெற்று நற்பெயரை ஈட்டியுள்ளது.[1] இராம்ராஜ் நிறுவனம் சுமார் 4000 தனித்துவமான வேட்டி வகைகளை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.[2] பாரம்பரிய உடைகளை மையமாகக் கொண்ட இதன் கருத்தாக்கத்தால் இராம்ராஜ் வணிகக்குறி பெற்ற புகழானது, மிஸ்டர் ஒயிட், எம். சி. ஆர் போன்ற பிற வணிகக்குறிகளும் தங்கள் பங்களிப்பை அதிகரிக்க வழிவகுத்தது. இராம்ராஜ் காட்டன் நிறுவனம் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.[3][4]

நிறுவன வரலாறு

[தொகு]

துவக்க ஆண்டுகளில்

[தொகு]

இராம்ராஜ் காட்டன் நிறுவனமானது, 1983 ஆம் ஆண்டு திருப்பூரில் இராம்ராஜ் காதி டிரேடர்ஸ் என்ற பெயரில் ஒரு சிறிய அலுவலகத்தில் கே. ஆர். நாகராஜனால் நிறுவப்பட்டது. பாரம்பரிய இந்திய உடையான வேட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. இராம்ராஜ் காதி டிரேடர்ஸ் தனது வணிகச் செயல்பாடுகளை ஒரு மேசை, நாற்காலி ஆகிய தளபாடங்களாகக் கொண்டு மட்டுமே தொடங்கப்பட்டது. திருப்பூர் பகுதியில் வசிக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் நிலையற்ற சூழ்நிலையில் இருந்தது கே. ஆர். நாகராஜனை அவர்கள் மீது அனுதாபம் கொள்ள வைத்தது. இதன் விளைவாக, வேட்டி விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயின் மூலம் நெசவாளர்களுக்கு உதவுவதும் நோக்கமும், இவர் இராம்ராஜ் காதி டிரேடர்சைத் தொடங்க ஒரு காரணமாகும். கே. ஆர். நாகராஜன் தனது பெயரையும் (நாகராஜன்), தந்தை பெயரையும் (இராமசாமி) சேர்த்து நிறுவனத்துக்கு "ராம்ராஜ்" என்று நிறுவனத்திற்கு பெயரிட்டார். மேலும் "பாரம்பரிய நாகரீகம் புதிய பொலிவுடேன்" என்ற வாசகத்தையும் பயன்படுத்தினார்.

பின்னர் 1987 ஆம் ஆண்டில் இராம்ராஜ் காதி டிரேடர்ஸ் நிறுவனம் என்ற பெயர் இராம்ராஜ் காட்டன் என மாற்றப்பட்டது. அதன்பிறகு நிறுவனத்தில் பருத்தியை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் வணிகக்குறியில் உயர்தர பருத்தி துணிகளில் கவனம் செலுத்துவதற்காக, காதியின் பயன்பாட்டை மாற்றியமைத்தது.[5]

1989 மற்றும் 1994இக்கு இடையில், இவர்கள் தங்கள் தயாரிப்பு பொருட்களாக வெள்ளைச் சட்டைகள், உள்ளாடைகள் மற்றும் ஆண்களுக்கான பல்வேறான ஆடைகளை விரிவுபடுத்தினர். 1999 ஆம் ஆண்டில், இந்த வணிகக்குறி, தமிழ்நாட்டின், திருப்பூரில் தங்கள் முதல் பிரத்யேக கடையைத் திறந்தது.[6][7]

2001 ஆம் ஆண்டு "சல்யூட் இராம்ராஜுக்கு சல்யூட்" என்ற விளம்பரப் பரப்புரைக்கு முன்பு, இந்த வணிகக்குறி தென்னிந்தியா முழுவதும் பல இடங்களில் பிரத்யேக கடைகளைத் திறந்திருந்தது.

சல்யூட் இராம்ராஜுக்கு

[தொகு]

கே. ஆர். நாகராஜன் சல்யூட் ராம்ராஜுக்கு என்ற விளம்பர வாசகத்தை பிரபலப்படுத்தினார். மேலும் மலையாள நடிகர் ஜெயராம், தெலுங்கு நடிகர் ரானா தக்குபாடி, மூத்த தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தக்குபாடி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் மற்றும் பிரபலங்களை வணிகக்குறி தூதர்களாக அழைத்து வந்து, சல்யூட் இராம்ராஜுக்கு கருப்பொருளின் பின்னணியில் இசைக்கும் வகையில் தனது ராம்ராஜ் வணிகக்குறி ஆடைகளை பாரம்பரிய உடைகளின் விளம்பரங்களை படமாக்கினார்.[5][8][9][10] சல்யூட் இராம்ராஜுக்கு என்ற கீதத்தை இணைத்த பின்னணியில் உள்ள அடிப்படை நோக்கம், அதன் நிறுவனர் கே. ஆர். நாகராஜனின் தனிப்பட்ட அவமானத்தைப் பின்னணியாக கொண்டதாகும். ஒரு காலத்தில் அவரது பாரம்பரிய உடை காரணமாக ஐந்து நட்சத்திர விடுதிக்குள் அனுமதி மறுக்கப்பட்டது.[5] வேட்டிகளின் நிலையை பண்பாட்டுப் பெருமையின் நிலை என உயர்த்துவதில் இராம்ராஜ் காட்டன் தன் அடிப்படை உள்ளுணர்வில் உறுதியாக இருப்பதை உறுதிபடுத்துவதில், நாகராஜனின் சிந்தனை தன் செயல்முறையில் கவனம் செலுத்தியது. பல ஆண்டுகளாக, இராம்ராஜின் சந்தைப்படுத்தல் உத்திகளால், பொதுமக்கள் வேட்டிகள் மீது நேர்மறையான பார்வையை கொண்டனர்.[11]

பிற வணிகக்குறிகள்

[தொகு]

2013 ஆம் ஆண்டளவில், இந்த வணிகக்குறி மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. குழந்தைகளுக்கான "லிட்டில் ஸ்டார்ஸ்", லினன் சட்டைகளுக்கு "லினன் பார்க்", இடுபில் சரிசெய்யக்கூடிய வேட்டிக்கு "ஜென்க்ஸ்ட்", தூய பட்டுத் துணிகளுக்கு "லக்னா" போன்ற துணை வணிகக்குறிகளையும் உருவாக்கி சந்தை படுத்தியது.[11]

2015 ஆம் ஆண்டில், வேட்டிகட்டிய ஆண்கள் தங்கள் உடைமைகளை, அதாவது பணப்பை, கைபேசி, கைக்குட்டைகளை போன்றவற்றை வைத்து, வசதியாக எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்களைத் தணிக்கவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாக்கெட் வேட்டிகளை இராம்ராஜ் அறிமுகப்படுத்தியது.[12] இதேபோல், இராம்ராஜ் காட்டன் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக சிறிய பைகள் கொண்ட ஒட்டிக்கோ கட்டிகோ வேட்டிகளை தயாரிக்கத் தொடங்கினார்.[13] 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் 3 உற்பத்தி அலகுகளை வைத்திருந்தது, தென்னிந்திய பிராந்தியத்தில் 82 க்கும் மேற்பட்ட பிரத்யேக விற்பனை நிலையங்கள் மற்றும் 6,000 பல்-வணிகக்குறி விற்பனை நிலையங்களைக் கொண்டிருந்தது.[14]

2019 ஆம் ஆண்டில், உலகளாவிய இணைய வணிகத்துக்காக தங்களின் மின்-வணிக தளத்தை இராம்ராஜ் அறிமுகப்படுத்தியது.[11]

பின்னர், பெரியவர்களின் வசதிக்காக இராம்ராஜ் காட்டன் "ஒட்டிக்கோ கட்டிக்கோ" வேட்டிகளை அறிமுகப்படுத்தியது.[15] குழந்தைகளை இலக்காகக் கொண்டு, "கட்டிக்கோ இல்ல ஒட்டிக்கோ" என்ற விளம்பர வாசகத்துடன் ஒரு வணிக விளம்பரத்தையும் இராம்ராஜ் தயாரித்தது.[15][16]

2020 ஆம் ஆண்டளவில், இந்த வணிகக்குறி அவர்களின் துணை வணிகக்குறியான “ரம்யம்” வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை வணிகத்தில் இறங்கியது.[11]

2021 செப்டம்பரில், மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடை மாற்றத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, "காந்தி வேட்டி நூற்றாண்டு விழா" என்ற கருப்பொருளின் கீழ் ஒரு சிறப்பு நிகழ்வை நிறுவனம் நடத்தியது.[17]

2023 ஆம் ஆண்டில், மூத்த நடிகர் வெங்கடேஷ் டகுபதி அவர்கள் 250வது கடையை விஜயவாடாவில் திறந்து வைத்தார்.[18]

2025 ஆம் ஆண்டில், அபிசேக் பச்சன் மற்றும் சென்னையின் எப் சியுடன் இணைந்து இராம்ராஜ் ஒரு புதிய விளம்பரப் பரப்புரையைத் தொடங்கியது.[2]

நிலைத்தன்மை முயற்சிகள்

[தொகு]

கடந்த சில ஆண்டுகளாக, இராம்ராஜ் காட்டன் நிறுவனம் தன் உற்பத்தி செயல்முறைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஒருங்கிணைப்பதாக உறுதியளித்துள்ளது.

தற்போது, இந்த வணிகக்குறி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சவுதி அரேபியா, அபுதாபி, குவைத், ஓமன், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மியான்மர் உள்ளிட்ட 13+க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது பொருட்களை விற்கிறது. மேலும் இந்தியா முழுவதும் 300+க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது.[6][7][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Service, Express News (2023-06-12). "Ramraj Cotton opens 250th store on 40th anniversary". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-11-04.
  2. 2.0 2.1 "Abhishek Bachchan flaunts dhoti with pride in Ramraj Cotton's new spot". afaqs (in ஆங்கிலம்). 2025-01-13. Retrieved 2025-01-21.
  3. "Ramraj Cotton launches new outlet at Anna Nagar". The New Indian Express (in ஆங்கிலம்). 2018-10-22. Retrieved 2024-11-04.
  4. "Ramraj Cotton Opens New Store at Shamshabad". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). 2024-08-21. Retrieved 2024-11-05.
  5. 5.0 5.1 5.2 "A white revolution" (in en-IN). The Hindu. 2013-10-11. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/metroplus/society/a-white-revolution/article5221439.ece. 
  6. 6.0 6.1 "India requires skill development to compete in the textile race: Ramraj Cotton Chairman KR Nagarajan". globaltextilesource.com (in ஆங்கிலம்). 2024-09-24. Retrieved 2025-01-10.
  7. 7.0 7.1 "Madurai: He built up a brand to help weavers". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்). 2022-05-23. Retrieved 2025-01-10.
  8. "Rana as Brand Ambassador For Ramraj Cotton Vests". MovieGalleri (in ஆங்கிலம்). 2017-09-14. Retrieved 2025-01-21.
  9. "Ramraj Ropes In Rana Daggubati As An Endorser". OrissaDiary (in ஆங்கிலம்). 2017-09-14. Retrieved 2025-01-21.
  10. "Ramraj Cotton's Successful Partnership with Victory Venkatesh". ManaTelugu (in ஆங்கிலம்). 2024-10-02. Retrieved 2025-01-22.
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 "Ramraj weaves a success story with labour innovation". BusinessLine (in ஆங்கிலம்). 2013-10-21. Retrieved 2024-11-05.
  12. "How ready-to-wear saris and veshtis are bringing tradition back to everyday style" (in en-IN). The Hindu. 2024-10-29. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/life-and-style/fashion/how-ready-to-wear-saris-and-veshtis-are-bringing-tradition-back-to-everyday-style/article68804268.ece. 
  13. "Ramraj launches velcro pocket dhoti". BusinessLine (in ஆங்கிலம்). 2015-02-14. Retrieved 2024-11-04.
  14. "Ramraj Cotton to tap Rs 5,000 crore vests market". The New Indian Express (in ஆங்கிலம்). 2017-09-14. Retrieved 2024-11-04.
  15. 15.0 15.1 "Ottikko Kattikko dhoties from Ramraj". The New Indian Express (in ஆங்கிலம்). 2020-01-01. Retrieved 2024-11-04.
  16. Revathy, L. N. (2019-12-31). "Now, adjustable dhotis with shirts to match from Ramraj Cotton". BusinessLine (in ஆங்கிலம்). Retrieved 2024-11-04.
  17. Service, Express News (2021-09-23). "Ramraj Cotton celebrates 100 years of Gandhi's attire change". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-11-04.
  18. "Ramraj Cotton opens 250th store on 40th anniversary". TheNewIndianExpress (in ஆங்கிலம்). 2023-06-12. Retrieved 2025-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்ராஜ்_காட்டன்&oldid=4351311" இலிருந்து மீள்விக்கப்பட்டது