இராம்நகர்
தோற்றம்
இராம்நகர் (Ramnagar) என்பது வடக்கு அந்தமான் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் பிரதேசமான திக்லிபூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாகும்.[1] சுமார் 1400 பேர் இங்கு வாழ்கின்றனர்.
இராம்நகர் திக்லிபூருக்கு தெற்கே சுமார் 18 கிமீ தொலைவிலும், வடக்கு அந்தமானின் மிக உயரமான இடமான சாடில் சிகரத்திற்கு தெற்கே 7.5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. தாரலைட் விரிகுடா மற்றும் இராம் நகர் கடற்கரைக்கு அடுத்ததாகவும், சாலிசு ஏக் குகைகள் மற்றும் ஆல்ஃபிரட் குகைகளுக்கு அருகிலுள்ள கிராமமாகவும் இருப்பதால், இக்கிராமம் வடக்கு அந்தமானில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழ்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Government of India (2011), Andaman and Nicobar Islands Statistical Hand-Book - North and Middle Andaman, 2007-08 To 2009-10