உள்ளடக்கத்துக்குச் செல்

இராம்சேவக் சிங் குசுவாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்சேவக் சிங் குசுவாகா
Member of the பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2005–2010
தொகுதிமிர்கஞ்ச்
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2010–2015
தொகுதிகதுவா
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2015–2020
தொகுதிகதுவா
சமூக நலத்துறை அமைச்சர், பீகார் அரசு
பதவியில்
2 சூன் 2019[1] – 16 நவம்பர் 2020
தேசிய பொதுச் செயலர்-ஐக்கிய ஜனதா தளம்[2]
பதவியில் உள்ளார்
பதவியில்
March 2023
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2025
முன்னையவர்இராஜேசு சிங் குசுவாகா
தொகுதிகதுவா சட்டமன்றத் தொகுதி, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்

இராம்சேவக் சிங் குசுவாகா (Ramsewak Singh Kushwaha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவார் ஐக்கிய ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

இளமை

[தொகு]

இராம்சேவாக் சிங் இவர் உச்சககான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அசுனந்த் தோலா கிராமத்தில் வசிப்பவர். சிங் பீகாரின் கொய்ரி இனக்குழுவினைச் சேர்ந்தவர்.[3] இவர் இளநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவம் படங்களைப் பெற்றுள்ளார்.[4] அரசியலில் சேருவதற்கு முன்பு, இவர் மருத்துவராக இருந்தார்.

அரசியல்

[தொகு]

இராம்சேவக் சிங் குசுவாகா பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ச்சியாக ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளா. இவர் கதுவா சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 2019ஆம் ஆண்டில் நிதீசு குமார் அரசாங்கத்தில் முதல் முறையாக அமைச்சரானார்.[5] இதற்கு முன்பு, இவர் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமைக் கொறடாவாக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்கு முன்பு, பாலேசுரா ஊராட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். முகியா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இவர் முதல் முறையாக கதுவா சட்டப்பேரவைத் தொகுத்யிலிருந்து நிதீசு குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு இவர் தொடர்ச்சியாக நான்கு தேர்தல் வெற்றிகளைப் பெற்றார்.[6][7][8][9]

2001ஆம் ஆண்டில் கதுவா சட்டமன்றத் தொகுதியின் பலேசுரா பஞ்சாயத்தின் தலைவர் முகியா பதவிக்கு போட்டியிடுவதன் மூலம் சிங் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் முகியா தேர்தலில் 170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல் முறையாக பிப்ரவரி 2005இல், பீகார் சட்டமன்றத்திற்கு 7,700 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வெற்றி பெற்றார். இதே ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில், இவர் மீண்டும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2010 தேர்தலில் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் 2015ஆம் ஆண்டில், மாநில சட்டமன்றத் தேர்தலில் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான்காவது முறையாக வெற்றி பெற்றார்.[6][10] மீண்டும் ஐந்தாவது முறையாக 2025ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

2005ஆம் ஆண்டில், கதுவா சட்டமன்றத் தொகுதி மிர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி என்று அழைக்கப்பட்டது. 2010இல் எல்லை வரையறை நடைமுறைக்குப் பிறகு, மிர்கஞ்ச் தொகுதி அந்த வகையில் இல்லாமல் போனது. சிங் 2005ஆம் ஆண்டில் மிர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிந்து முதல் சட்டமன்றத் தேர்தலிலும், அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றார், மேலும் இது கதுவா என்று மறுபெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, இதே தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்று மேலும் இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.[11][12] இவரது அரசியல் சாதனைகள் காரணமாக, இவர் 2019இல் சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6]

2020 கதுவா சட்டமன்றத் தொகுதியில், இவரை இராஜேசு குமார் சிங் தோல்வியடையச் செய்தார்.[13][14]

2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், இராச்டிரிய ஜனதா தளத் தலைவர் இராஜேசு சிங் குசுவாகாவிற்ற்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இவரை நிறுத்தியது. இந்தத் தேர்தலில், கோபால்கஞ்ச் மாவட்டத்தின் கதுவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Nitish inducts 8 JD-U members in Cabinet, leaves out BJP". Business Standard. Retrieved 14 March 2023.
  2. ↑ "K C Tyagi, JD(U)'s well-known face, does not find place in new national team of Nitish Kumar's party". 21 March 2023. https://timesofindia.indiatimes.com/india/k-c-tyagi-jdus-well-known-face-does-not-find-a-place-in-new-national-team-of-nitish-kumars-party/articleshow/98871042.cms. பார்த்த நாள்: 23 March 2023.
  3. ↑ "Former mla Umesh kushwaha is JDU president". Indian express. 11 January 2021. Retrieved 19 July 2024.
  4. ↑ "Report from Lalu's home town". The Times of India. 30 October 2015. https://timesofindia.indiatimes.com/elections/bihar-elections-2015/news/pitch-report-from-lalus-home-town-phulwaria-in-gopalganj-district/articleshow/49600723.cms.
  5. ↑ "लालू के गढ़ में JDU का परचम लहराने वाले इस शख्स को नीतीश ने दी कैबिनेट में जगह". News18. 2 June 2019. Archived from the original on 30 June 2019. Retrieved 21 February 2023.
  6. 1 2 3 "Who is Ramsewak Singh, who is going to become the state president of JDU from an agriculturist". Abplive. 9 January 2021. Archived from the original on 7 January 2022. Retrieved 21 February 2023.
  7. ↑ "former-minister-ramsevak-singh-will-be-jdu-state-president-cm-nitish-kumar-believed-on-pair-of-luv-kush". ABP Live. 9 January 2021. Archived from the original on 9 January 2021. Retrieved 21 February 2023.
  8. ↑ "Who-will-become-jdu-president-ram-sevak-singh-sanjay-jha-neeraj-kumar-is-in-race-nitish-kumar-will-decide". Dainik Bhaskar. Archived from the original on 21 February 2023. Retrieved 21 February 2023.
  9. ↑ "Can JDU maintain its winning streak on Hathua assembly constituency". AajTak. 26 September 2020. Archived from the original on 2023-02-21. Retrieved 21 February 2023.
  10. ↑ "मुखिया से सफर की शुरुआत कर मंत्री बने रामसेवक सिंह". jagran.com. Archived from the original on 21 February 2023. Retrieved 21 February 2023.
  11. ↑ "Bihar Election: लालू के 'घर' में ही अब तक एक बार भी नहीं जीत सका है राजद, 35 साल से जीत के इंतजार में कांग्रेस". JANSATTA. October 2020. Archived from the original on 20 August 2022. Retrieved 21 February 2023.
  12. ↑ "लालू प्रसाद यादव के पैतृक गांव की इस सीट कभी नहीं जीता RJD का उम्मीदवार, अब जेडीयू का है दबदबा". Aajtak. 6 October 2020. Archived from the original on 2023-02-21. Retrieved 21 February 2023.
  13. ↑ "Rajesh Kumar Singh wins at Hathua". Prabhat khabar. 10 November 2020. Archived from the original on 26 November 2020. Retrieved 21 February 2023.
  14. ↑ "JDU के 2 रतन - एक लव, दूसरा कुश:जदयू के प्रदेश अध्यक्ष बनाए गए इस बार चुनाव हारे उमेश कुशवाहा, अचानक मिले CM तो खुली किस्मत". 24 March 2023 (in Hindi).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  15. ↑ "Hathua Assembly constituency 2025". Election Commission of India. Retrieved 22 November 2025.