இராம்குலாம் சௌத்ரி
Appearance
இராம்குலாம் சௌத்ரி (Ramgulam Chaudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வங்காள மாகாணத்தில் இவர் பிறந்தார், காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய சுதந்திரத்திற்கான இயக்கத்தில் பங்கேற்று மகாத்மா காந்தியால் போற்றப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பல்வேறு முறை சிறை சென்றார். அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்புக் கழகத்தின் துணைத் தலைவர் என்றும் அறியப்படுகிறார். வரலாற்று சிறப்புமிக்க சிம்லா மாநாட்டில் பங்கேற்று, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக மூன்றாவது மாநிலத்தை உருவாக்கும் யோசனையை நிராகரித்தார். இது நாட்டை இரண்டாகப் பிரிக்காமல் மூன்றாகப் பிரிப்பதைத் தடுக்க உதவியது. 1957 ஆம் ஆண்டில் பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இராம்குலாம் சௌத்ரி முசாபர்பூரில் இறந்தார்.