இராமேசுவர் தாசு பிர்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமேசுவர் தாசு பிர்லா (Rameshwar Das Birla) (1892-1973) இவர் ஓர் இந்திய தொழில்முனைவோரும், அறக்காரியங்களை செய்து வந்தவருமாவார். இவர் பல்தேவ் தாசு பிர்லாவின் இரண்டாவது மகனாவார். மாதவ் பிரசாத் பிர்லா, கஜனன் பிர்லா என்ற இரு மகன்கள் இவருக்கு இருந்தனர். [1] மும்பை, பிலானி, கொல்கத்தா போன்ற இடங்களில் மருத்துவமனைகளையும், கல்வி நிறுவனங்களையும் நிறுவியதன் மூலம் இவர் நன்கு அறியப்படுகிறார்..

1922 ஆம் ஆண்டில் தனது முதல் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து மகேசுவரி சாதியில் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதனால் இவரது குடும்பத்தில் பிளவு ஏற்பட்டது. இவரது புதிய மனைவி மகேசுவரி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், திருமணம் தொடர்பான சாதி விதிகளை மீறியதாலும் இவர்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். [2] [3]

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. The Birlas: Empire in transition, The Birlas: Representing a fascinating saga in Indian enterprise, T.N. Ninan with Ch ander Uday Singh and Sumanta Sen, India Today, July 20, 2013
  2. Timberg, Thomas A. (1969). Industrial Entrepreneurship Among the Trading Communities of India: How the Pattern Differs. Development Advisory Service, Center for International Affairs, Harvard University. பக். 46. 
  3. Weinberger-Thomas, Catherine (1999). Ashes of Immortality: Widow-Burning in India. University of Chicago Press. பக். 177. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேசுவர்_தாசு_பிர்லா&oldid=3033778" இலிருந்து மீள்விக்கப்பட்டது