இராமு கரியத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமு கரியத்
பிறப்பு(1927-02-01)1 பெப்ரவரி 1927
எங்கான்டியூர், திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா
இறப்பு10 பெப்ரவரி 1979(1979-02-10) (அகவை 52)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1954–1979
குறிப்பிடத்தக்க படைப்புகள்செம்மீன் (திரைப்படம்), நீலக்குயில்
உறவினர்கள்தேவன்

'இராமு கரியத் (Ramu Kariat) (1 பிப்ரவரி 1927 – 10 பிப்ரவரி 1979) 1950 முதல் 1970 வரை கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக மலையாளத் திரைப்படத்துறையில், திரைப்பட இயக்குநராக இருந்தார். பாராட்டப்பட்ட பல படங்களை மலையாளத்தில் இயக்கியுள்ளார். இவரது குறிப்பிடத்தக்க படங்களில் நீலக்குயில் (1954), மின்னாமினுங்கு (1957), முதியநாய புத்ரன் (1961), மூடுபாடம் (1963) தேசிய விருது பெற்ற செம்மீன் (1965) ஆகியவை அடங்கும்.

தொழில்[தொகு]

இடதுசாரி அரசியல் நாடகக் குழுவான கேரள மக்கள் கலைக் கழகம் (கே.பி.ஏ.சி) மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். திரமாலா (1953) என்ற படத்தை விமல் குமார் / பி.ஆர்.எஸ். பிள்ளை ஆகியோருடன் இணைந்து இயக்கியதன் மூலமும், பு. பாஸ்கரனுடன் 1954 ஆம் ஆண்டில் நீலக்குயில் படத்திலும் அறிமுகமானார். சத்யன், மிஸ் குமாரி ஆகியோர் நடித்திருந்த [[நீலக்குயில்[[ படத்தின் கதையை கேரளாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் உரூப் என்பவர் எழுதியிருந்தார். இது ஒரு பெரிய வணிக வெற்றியாக இருந்தது

இயக்கம், திரைக்கதை, நடிப்பு, இசை ஆகியவற்றில் தொழில்முறை அணுகுமுறையின் காரணமாக இந்தப் படம் மலையாளத்தின் முதல் முதிர்ந்த படமாக கருதப்படுகிறது. இவருடன் இப்படத்தில் பணியாற்றிய இணை இயக்குனர் பு. பாஸ்கரன், ஒளிப்பதிவு இயக்குநர் அ. வின்சென்ட் ஆகியோர் சிறந்த தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

நீலக்குயிலுக்குப் பிறகு, இவர் மற்றொரு குறிப்பிடத்தக்க படமான மின்னாமினுங்கு (1957) இயக்கினார். இவரது அடுத்த படம் மூத்த நாடக ஆசிரியர் தோப்பில் பாசியின் முதியநாய புத்ரன் (1961) நாடகத்தின் திரைப்பட பதிப்பாகும். மூடுபாதம் (1963) இயக்கிய பிறகு, செம்மீன் (1965) படத்தை இயக்கினார். செம்மீன் என்ற அதே பெயரில் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய புதினத்தின் தழுவலான படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் மலையாள திரைப்படமாகும். சோகமான காதல் கதையில் மது, சத்யன், ஷீலா ஆகியோர் நடித்திருந்தனர்.

1975 இல் 9 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தார். [1]

இவர் தனது தொழில் வாழ்க்கையில் பதினைந்து படங்களை இயக்கியுள்ளார். 1965ஆம் ஆண்டில் நாட்டிகாவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சட்டமன்றத்தில் பணியாற்ற முடியவில்லை. ஏனெனில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் சட்டமன்றத்தை உருவாக்க முடியவில்லை.

விருதுகள்[தொகு]

  • 1954 : சிறந்த திரைப்படத்திற்கான அகில இந்திய சான்றிதழ் - நீலக்குயில்[2]
  • 1954 : மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் - நீலக்குயில்
  • 1961 : மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் - முதியநாய புத்ரன்[3]
  • 1965 : சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - செம்மீன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "9th Moscow International Film Festival (1975)". MIFF. Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2013-01-04.
  2. "2nd National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 23 August 2011.
  3. "9th National Film Awards". International Film Festival of India. Archived from the original on 2 December 2016. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமு_கரியத்&oldid=3103333" இலிருந்து மீள்விக்கப்பட்டது